மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணங்களில் ஒன்று பாஸ்போர்ட். இந்த பாஸ்போர்ட் பெற ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பாஸ்போர்ட் பெறுவதற்கான செயல்முறை மற்றும் அதற்கு தேவையான ஆவணங்கள் நாடுகளுக்கு நாடு மாறுபடும். இப்படியான சூழலில், தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக நாடு முழுவதும் 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என மதுரை பாஸ்போர்ட் பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி (Regional Passport Officer) வசந்தன் […]
டெல்லி : இன்று முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரையில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் அரசு சேவை இணையதளம் பராமரிப்பு காரணங்களால் மூடப்படுகிறது. இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் முக்கிய அடையாள அட்டையாக பாஸ்போர்ட் எனும் கடவு சீட்டு உள்ளது. இந்த பாஸ்போர்ட் பெற ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதன் மூலம் அப்பாய்ண்ட்மென்ட் (முன்குறிப்பிட்ட தேதி) பதிவு செய்து அந்த தேதியில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆவணங்களை பதிவு செய்ய […]
பாகிஸ்தானில் மாவு, சர்க்கரை, எண்ணெய் மற்றும் அத்தியாவசிய உணவு தானியங்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டு வந்த நிலையில் தற்போது என்ன பற்றாக்குறை என்பதை தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பாகிஸ்தானில் பாஸ்போர்ட் அச்சடிக்கப்படுவதில்லை. லேமினேஷன் பேப்பர் தட்டுப்பாடுதான் இதற்குக் காரணம். இந்தத் தகவலை பாகிஸ்தானின் எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் நாளிதழ் தெரிவித்துள்ளது. இந்த செய்தி தற்போது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாகி வருகிறது. மேலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால் பாகிஸ்தான் அரசு இது குறித்து […]
அதிக எண்ணிக்கையில் பாஸ்போர்ட் வைத்திருக்கும் மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் இருக்கிறது. தற்போது வெளிநாடு சென்று வேலை பார்க்கும் ஆர்வமும், வெளியூர் சுற்றுலா செல்லும் ஆர்வமும் அதிகமாகி வருவதால் பாஸ்போர்ட் எடுக்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதற்கு வசதியாக பாஸ்போர்ட் ஆவணங்கள் சரிபார்க்கும் மையங்களும் அதிகரித்து உள்ளன. தற்போது பாஸ்போர்ட் பெற்றவர்கள் எண்ணிக்கையை மத்திய அரசு மாநில அளவிலான எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அதில், அதிக எண்ணிக்கையில், கேரளா 1.12 கோடி நபர்களை தாண்டி முதலிடத்தில் […]
பிரிட்டனின் புதிய அரசராக பதவியேற்றுள்ள கிங் சார்லஸுக்கு வழங்கப்படும் ராஜ மரியாதை. பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பின், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் (73), ராணி இறந்த 24 மணி நேரத்திற்குள் புதிய அரசராக புனித ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள பிரைவி கவுன்சில் முன் பதவியேற்றார். புதிய அரசராக பதவியேற்றுள்ள மன்னர் சார்லஸுக்கு சில ராஜ மரியாதைகள் வழங்கப்பட உள்ளது. பாஸ்போர்ட் […]
புனே அவை சேர்ந்த நபர் ஒருவர் தனது பாஸ்ப்போர்ட்டிலிருந்து குறிப்பிட்ட பக்கங்களை கிழித்ததற்காக மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்தர்ஷி யாதவ் (32) என்ற அந்த நபர் வியாழன் அன்று மாலத்தீவுக்கு விமானத்தில் ஏற முயன்றபொழுது அங்குள்ள அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.இவர் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதற்கு முன், தனது பயண வரலாற்றை மனைவியிடமிருந்து மறைக்க 2019 ஆம் ஆண்டில் பயணம் செய்த குறிப்பிட்ட பக்கங்களை கிழித்துள்ளார். யாதவ் தாய்லாந்திற்கு சென்ற தனது […]
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.அதன்படி,சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதனைத் தொடர்ந்து,காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிலுரை ஆற்றி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில்,திமுக ஆட்சியில் வன்முறைகள் இல்லை எனவும் மத,சாதி கலவரங்கள் இல்லை,துப்பாக்கிச்சூடுகளும் இல்லை எனவும் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,காவல்துறை என்பது குற்றங்களே நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக மாற வேண்டும் என்றும் கூறியிருந்தார். […]
பாகிஸ்தானுக்கு சென்று இருந்த பொழுது பாஸ்போர்ட்டை தவறுதலாக தொலைத்ததால் சட்டவிரோதமாக குடியேறியதாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண்மணி 18 வருடங்களுக்கு பிறகு தற்போது விடுவிக்கப்பட்டு இந்தியா திரும்பியுள்ளார். இந்தியாவில் உள்ள அவுரங்காபாத் பகுதியை சேர்ந்த பெண்மணி ஹசீனா என்பவர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சஹாரன்புர் பகுதியைச் சேர்ந்த தில்ஷாத் அகமது என்பவரின் மனைவி. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த பதினெட்டு வருடங்களுக்கு முன்பதாக ஹசீனா தனது […]
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் உத்தரவை மீறினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் வெளியே நடமாடினால் அதீத நடவடிக்கையாக பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. மேலும் வீட்டில் இருக்காமல் வெளியே நடமாடினால் காவல்துறை மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சிரிக்கையாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் வெளியே நடமாடுவது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தனிப்படுத்தப்பட்ட பயணிகள் அரசின் உத்தரவை […]
போலிகளை கண்டறியவே பாஸ்போர்ட் மீது தாமரை அச்சிப்பட்டுள்ளது. தாமரை சின்னம் அச்சிடப்பட்ட பாஸ்போர்ட்கள் வழங்கப்படுவது காவிமயமாக்குதலின் மற்றொரு திட்டமா என கேள்வி. வெளிநாடுகளுக்கு செல்ல மற்றும் அடையாள ஆவணமாக இருக்கும் பாஸ்போர்ட் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பாஸ்போர்ட் துறையினால் வழங்கப்படுகிறது. சமீபத்தில் கேரளாவின் கோழிக்கோடு பகுதிகளில் விண்ணப்பித்தவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம் அச்சியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஸ்போர்ட்டின் இரண்டாவது பக்கத்தின் கீழே மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கையெழுத்து இடம் பெற்றிருக்கும். புதிய பாஸ்போர்ட்டுகளில் அதிகாரியின் கையெழுத்து […]
தேடப்படும் நபராக தற்போது மாறியுள்ளார் நித்யானந்தா. புது பாஸ்போர்ட் கேட்டு நித்யானந்தா சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புதிய விண்ணப்பத்தை நிராகரித்து வெளியுறவு துறை அமைச்சகம் அறிவிப்பு பல சர்ச்சைகளில் சிக்கி இந்திய அரசேதற்போது தேடிவரும் நபராக மாறியுள்ளார் நித்தியானந்தா. இவரை கண்டறிய குஜராத் அரசானது, ப்ளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பி சர்வதேச இன்டெர்போல் உதவியுடன் கண்டறிய திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் நித்தியானந்தா சார்பில் புதிய பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பம் கொடுக்கபட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தை அதிரடியாக நீக்கி மத்திய […]
டெல்லியில் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கமிஷனுக்கான கட்டடம் ஒன்று கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, ‘ உலக மக்கள் தொகையில் இந்தியாவில் மக்கள் தொகை அளவு 17.5 சதவீதமாகும், ஆனால், பரப்பளவில் உலகளவில், இந்தியாவின் பங்கு 2.4 சதவீதம் மட்டுமே இருக்கிறது. இந்த குறைபாட்டை சரிசெய்ய வேண்டும். என […]
எக்கானமி டிஜிட்டல் சட்டம் 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த சட்டம் பல முறை தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் முதல் இந்த சட்டம் அமலுக்கு வர உள்ளது. ஆன்லைனில் ஆபாசம் படம் பார்க்க இனி பாஸ்போர்ட் இருந்தால் தான் பார்க்க முடியும் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. ஆன்லைனில் ஆபாசம் படம் பார்ப்பவர்கள் தங்களது வயதை நிரூபித்தால் தான் ஆபாசம் படம் பார்க்க முடியும். குழந்தைகள் ஆபாசம் படங்களை பார்ப்பதை தடுப்பதற்காக இந்த சட்டம் […]
உலகம் முழுவதும் உள்ள தூதரகங்கள் மூலம், 48 மணி நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் துவக்கப்பட உள்ளதாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே. சிங் கூறியுள்ளார். வாஷிங்டனில் நடந்த பாஸ்போர்ட் சேவை திட்ட துவக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு 48 மணி நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் விரைவில் துவக்கப்படும் என்றார்.வரும் காலங்களில், உலகளவில் பாஸ்போர்ட் சேவையில் இந்தியா சிறந்து விளங்கும் என்றும், இந்திய தூதரகங்களில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்கள் டிஜிட்டல் […]
கடந்த மே மாதம் பிரான்ஸ் நாட்டிலிருந்து சென்னை வந்த தேனியை சேர்ந்த தேவராஜ் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்த போது அது போலி பாஸ்போர்ட் என தெரியவந்தது.இவரை தொடர்ந்து அடுத்தடுத்து நான்கு பேர் சிக்கினர் அவர்கள் ஐஸ் தீவிரவாதிகள் இருக்கும் நாடுகளுக்கு சென்று வந்துள்ளனர் ஆகையால் இந்த வழக்கு போலி பாஸ்போர்ட் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதற்காக தனிப்படை அமைத்து விசாரித்தபோது சென்னை , கோவை,உள்ளிட்ட பல இடங்களில் 11 பேர் சிக்கியுள்ளனர்.இதில் பாபு என்பவரிடம் விசாரித்தபோது தான் […]
சென்னையில் புத்தாண்டு அன்று குடிப்போதையில் வாகனம் ஒட்டி பிடிபட்ட 125 பேருக்கு பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று கிடைக்காது என தமிழக போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் பாஸ்போர்ட் கிடைக்காது என புத்தாண்டுக்கு முன்பாகவே காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.