மத்திய பிரதேசத்தில் உள்ள மாண்ட்சர் பகுதியில் கனமழை பெய்ததால் சிவ்னா ஆற்றின் நீர் ஊருக்குள் புகுந்ததால் அங்குள்ள பிரபல கோயிலான பசுபதிநாதர் கோவிலுக்குள் ஆற்று நீர் புகுந்தது. இதனால் கோவிலின் உள்ளே இருக்கும் சிவலிங்கத்தின் பாதி அளவு ஆற்று நீர் சூழ்ந்துள்ளது. மேலும் கோவில் வளாகத்தில் முன் இருந்த அனைத்து பொருட்களும் நீரில் மூழ்கி உள்ளன. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. […]