அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று ஜனவரி 22 (திங்கட்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள். இந்நிலையில், மலையாளத் திரையுலக பிரபலங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையின் படங்களைத் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில், பார்வதி திருவோத்து, ரீமா கல்லிங்கல், […]