தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.கருணாநிதி ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய பிறந்தநாளை தொண்டர்களுடன் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். அவர் உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், இன்று தனது 95வது பிறந்த நாளை அவர் உற்சாகமுடன் கொண்டாடினார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். பிரதமர் மோடி, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மத்திய மந்திரி பொன். […]