டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள 59-ஆம் எண் அறையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள 59-ஆம் எண் அறையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீ பற்றி எறிந்த நிலையில், அது அணைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தகவலளித்துள்ளனர். மேலும், தீ விபத்து ஏற்ப்பட்ட போது, அறையில் அதிகாரிகள் இல்லாததால் பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
அனைத்து வகையான தனியார் கிரிப்டோ கரன்சிகளையும் தடை செய்ய புதிய மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது குளிர்கால கூட்டத்தொடரில் கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் நாணயம் கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், புதிய சட்டம் மூலம் இந்தியாவின் அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கும் தடை விதிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்திற்கான கட்டமைப்பை ரிசர்வ் வங்கி […]
புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தை விவசாயிகள் நடத்தவுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், தலைநகர் டெல்லியில் போராட்ட நடத்தி வருகின்றனர். மத்திய அரசிற்கும், விவசாயிகள் அமைப்பிற்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், சுமுகமான முடிவுகள் எட்டப்படவில்லை. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், வேளாண் சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை என […]
நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியால் பிரதமர் பதவி ராஜினாமா செய்தார் கே.பி. ஓலி. நேபாளத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வந்த மாவோயிஸ்ட் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றது.இதனையெடுத்து திங்கள்கிழமை நேபாள பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, அதில் பிரதமர் கே.பி. சர்மா ஓலி க்கு 93 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர், மேலும் 124 பேர் எதிராகவும், 15 பேர் நடுநிலையாகவும் இருந்தனர், இதனால் பிரதமர் ஓலி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவினார். மேலும் சபையில் […]
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.இன்று முதல் பிப்ரவரி 30-ஆம் தேதி வரை முதல் அமர்வும், மார்ச் 8 முதல் ஏப்ரல் ஆம் தேதி வரை இரண்டாவது அமர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாடாளுமன்ற கூட்டத்தொடரை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது.அதாவது வேளாண் சட்டங்களை மத்திய அரசு […]
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டத்திற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாக முடிவடைந்துள்ளது. கொரோனா பரவல் காலத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரானது முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளுடன் கடந்த 14 ந்தேதி கூடியது.சூழற்சி முறையில் கூட்டத்தொடரானது காலை மக்களவை பிற்பகலில் மாநிலங்களவை என்று கூடியது.இந்நிலையில் வேளாண் மசோதா,12 எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு,புத்தகத்தை கிழித்த நிகழ்வுகள் உட்பட 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் இதை கண்டித்து எதிர்கட்சிகள் அமளி என்று நாடளுமன்ற கூட்டத்தொடர் ஆனது 10 நாட்கள் நடைபெற்ற நிலையில் அவையில் […]
இன்றுடன் கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கி, அக்டோபர் 1ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் தினமும் 4 மணி நேரம் நடைபெற்றன. இதில், வேளாண் மசோதா தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் எதிர்கட்சியினர் ராஜ்யசபாவிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனிடையே, மூன்றரை […]
16 நாடுகள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத நுழைவை வழங்குகின்றன என்று மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நேற்று நடைபெற்ற மாநிலங்களவையில் இந்தியர்களுக்கான விசா குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், சாதாரண இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஈரான், இந்தோனேசியா, மியான்மர் உள்ளிட்ட […]
சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் 8 எம்.பி.க்கள் நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ். மாநிலங்களவையை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்ததை அடுத்து தர்ணா போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் உத்தரவாத மசோதா மற்றும் அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை கூறி, எதிர்கட்சி எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த 3 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், […]
மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மீதான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரித்தார் வெங்கையா நாயுடு. மாநிலங்களவை விதிகளின் படி ஹரிவன்ஷ்க்கு எதிரான தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படாது என்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவையில், மசோதாவை நிறைவேற்ற குரல் வாக்கெடுப்பு நடத்துவதாக […]
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வெங்கையா நாயுடு தலைமையில் ஆலோசனை. மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் அவரது இல்லத்தில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகங்களை கிழித்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது அவர் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் மீது […]
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் இரு வேளாண் மசோதாக்கள் நிறைவேறியதையடுத்து, மாநிலங்களவை துணை தலைவர் எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மக்களவையில் மத்திய அரசு வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது. ஆனால் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகினார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் அவையில் கடும் எதிர்ப்பு அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை 10 […]
சிறப்பு ரயிலில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளர்கள் 97 பேர் இதுவரை இறந்துள்ளார்கள் என்று ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், விவாதத்தின்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், ஷார்மிக் சிறப்பு ரயில்களில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளர்களில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள்? என்று கேள்வி எழுப்பினார். ஏன்னென்றால், ஊடகங்களில் 50க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்ததாக தகவல் வெளியாகியிருந்தது என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த […]
கொரோனா சிகிச்சையில் கபசுரக் குடிநீர் நம்பிக்கையளிக்கிறது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து 6வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. காலையில் நடைபெற்ற மாநிலங்களவையில் வங்கி திவால் சட்ட திருத்த மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மார்ச் 25-ஆம் தேதிக்கு முன்பு வரை கடன் வாங்கி செலுத்தாதவர்கள் மீது வங்கிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தார். இதனையடுத்து வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் […]
இந்தி, ஆங்கிலம் தவிர பிற மொழிகளை அலுவல் மொழியாக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மூன்றாவது நாளான இன்று மாநிலங்களவை நடைபெற்று வருகிறது. அப்போது, இந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் வகையில் அலுவல் மொழிகள் சட்டத்தில் திருத்தும் செய்யும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? என்று மதிமுக பொதுச்செயலாளர் எம்.பி வைகோ கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகம், இந்தி, ஆங்கிலம் […]
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை குறைப்பதற்கான மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே எம்.பி.க்கள் சம்பளம் 30 சதவிகிதம் குறைப்பு உள்பட 4 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, கொரோனா காரணமாக தடுப்பு நடவடிக்கைகளுக்கு, நிதி தேவையை பூர்த்தி செய்யும் வகையில், எம்.பி.க்களின் சம்பளம் 30 சதவீதம் குறைக்கப்படுவதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி அவசர சட்டமும் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, […]
ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு வழங்க போதிய நிதி இல்லை என்று மத்திய ராசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரண்டாவது நாளான இன்று நடைபெற்று வருகிறது. அப்போது, நடப்பாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநில அரசுகளுக்கு வழங்க போதுமான நிதியில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு சார்பில் மாநிலங்களவையில் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ பதிவில் தகவல் கூறப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி வசூல் குறைவாக […]
மறைந்த கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு மக்களவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பொதுவாக ஜூலை முதல் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் வரை நடைபெறும். ஆனால், கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக கூட்டத்தொடர் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அக்டோபர் 1-ம் தேதி வரை கூடுகிறது. விடுமுறை இல்லாமல் தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறும் என்றும் அறிவித்தனர். நாடாளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி […]
கொரோனாவிலிருந்து மீண்ட பின் முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு செல்லவிருக்கும் பிரதமர் ஜான்சன். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த வைரஸை அழிப்பதற்கு, உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸானது சிறியவர், பெரியவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்கி வருகிறது. உலக அளவில் இதுவரை 38,20,656 பேர் பாதிக்கப்பட்டுள்ள […]
அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார். 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்தார்.எனவே பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது.இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை அமைதியாக நடத்துவது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார்.