பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக ராஜாபர்வேஷ் அஷ்ரப் நியமனம். பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின்பு நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில், இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதன்பின் பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த ராஜாபர்வேஷ் அஷ்ரப் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். பேரவைத் […]
நாளை, நாளை மறுநாள் இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு. இலங்கையில் பொருளாதார நெருக்கடி, தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் நாளையும், நாளை மறுநாளும் விவாதம் நடைபெறும் என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கையில் பரபரப்பான அரசியல் சூழலில், அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு நாடாளுமன்ற சபாநாயகர் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, மதியம் 2 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்றது. […]
பரபரப்பான அரசியல் சூழலில், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு. இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு நாடாளுமன்ற சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே அனைத்துக்கட்சி கூட்டம் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். இன்று காலை இலங்கை நாடாளுமன்றம் கூடியது. நாடாளுமன்றம் கூட்டம் தொடங்கு முன்பு துணை சபாநாயகர் ராஜினாமா செய்திருந்தார். அதனைத்தொடர்ந்து, உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றினர். இதனிடையே, 40க்கும் மேற்பட்ட எம்பிக்கள் […]