டெல்லி : மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி காங்கிரஸை விமர்சித்து சில விஷயங்களை பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” அரசமைப்பின் 75 ஆண்டை கொண்டாடும் வேளையில், எமர்ஜென்சி காலத்தைப் பற்றி பேச வேண்டியது அவசியம். அரசமைப்பின் 25-வது ஆண்டை கொண்டாடும்போது எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டது. ஜனநாயகத்தை நெறித்த கறைகளை காங்கிரஸ் கட்சியால் சுத்தம் செய்ய முடியாது. எமர்ஜென்சி காலத்தில் மக்களின் அதிகாரம் பறிக்கப்பட்டதோடு ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். தன்னுடைய பதவியை காப்பாற்றவே […]
டெல்லி : மக்களவையில் அரசியலமைப்புச் சட்ட விவாதத்தின் இரண்டாவது மற்றும் கடைசி நாளுக்காக இன்று விவாதம் நடைபெற்ற நிலையில், அதில் பேசிய பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் இந்தியாவை பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” உலகெங்கிலும் உள்ள அனைத்து ஜனநாயகத்தை நேசிக்கும் குடிமக்களுக்கும் இது மிகவும் பெருமையான தருணம். இந்த 75 ஆண்டுகால சாதனை சாதாரணமானது அல்ல, நம்மளுடைய நாடு சுதந்திரம் அடைந்த நேரத்தில் இந்தியாவிற்கு வெளிப்படுத்தப்பட்ட சாத்தியக்கூறுகளை முறியடித்து. இந்திய அரசியலமைப்பு தான் நம்மை […]
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவியின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் நோட்டீஸ். தமிழ்நாட்டுக்கு ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி செயல்பாடுகள் குறித்து மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளார். தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய 22க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தமிழக ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதாக குற்றசாட்டியுள்ளார். அதன்படி, நீட் விலக்கு, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் உள்ளிட்ட 22 மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவில்லை என தனது நோட்டீஸில் […]
கொரோனா வைரஸ் காரணமாக இந்த முறை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதத்தில் நடத்தப்படுவது வழக்கமாகும்.ஆனால் கொரோனா காரணமாக இந்த ஆண்டு இதுவரை குளிர்கால கூட்டத் தொடர் நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இதனிடையே வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராடி வரும் நிலையில்,இது குறித்து விவாதிக்க நாடாளுமன்றை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி நாடாளுமன்ற விவகார அமைச்சர் […]
சீனா 38,000 சதுர கி.மீ. பகுதியையும் ,பாகிஸ்தான் 5,180 சதுர கி.மீ. பகுதியையும் ஆக்கிரமித்துள்ளது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஏற்பாடுகளுடன் இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் பேசினார்.அவர் பேசுகையில், இந்தியா எல்லைப் பகுதியில் பல இடங்களை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது.லடாக் பகுதியில் 38,000 சதுர கி.மீ. நிலத்தை சீனா கையகப்படுத்தி உள்ளது. […]
இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை குறித்து விவாதம் நடத்த அனுமதி அளிக்காததால் காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரண்டாவது நாளான இன்று காலை மாநிலங்களவை கூடியது. அதில், ஜிஎஸ்டி இழப்பீடு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலார்கள் போன்ற முக்கிய விவாதங்கள் நடைபெற்றது. இந்நிலையில், மாலை 3 மணி அளவில் மக்களவை தொடங்கியது. அப்போது, இந்திய எல்லையில் நிலவும் சூழல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து, அமைச்சரின் […]
கிசான் திட்டத்தில் முறைகேடு நடைபெற்று உள்ள நிலையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் பிரதமர் கிசான் திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படும் என 2018-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.அதன்படி விவசாயிகள் வருவாய்த் துறையிடம் தங்கள் நிலத்திற்கான பட்டா சிட்டா சான்றிதழ் வாங்கிக்கொண்டு வேளாண்மை துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து இந்த உதவித்தொகையை பெற்று வந்தனர். பின்னர் குறைந்த அளவே விவசாயிகள் பயன் பெறுவதால் […]