Tag: parliamentary

நாடாளுமன்ற கூட்டத்தொடர்; 16 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 16 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம். ஒவ்வொரு ஆறு மாதத்திற்குக் குறைந்தது ஒரு முறையாவது நாடாளுமன்றம் கூட வேண்டும் என்ற விதி உள்ளது. அதன்படி, கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் நடைபெற்றது. இதுபோன்று ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும். ஆனால், இந்த முறை இமாச்சல பிரதேச மற்றும் குஜராத் சட்டசபைத் தேர்தல் காரணமாக குளிர்கால கூட்டத்தொடர் தாமதமானது. […]

#CentralGovt 4 Min Read
Default Image

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு என அறிவிப்பு. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் முடங்கியது. இன்று காலை மக்களவை தொடங்கியதில் இருந்து லக்கிம்பூர் சம்பவம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பினர். இதனால், காலை முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பிற்பகல் கூட்டம் தொடங்கியபோது அவைத் தலைவரின் இருக்கையின் முன்பு நின்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாளை காலை 11 மணி […]

lakhimpur incident 3 Min Read
Default Image

நவம்பர் 29 – ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர்!

குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் நவம்பர் 29 – ஆம் தேதி தொடங்குகிறது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் நடத்துவது குறித்து முடிவெடுப்பதற்காக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி இந்த மாதம் 29-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 23-ஆம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. […]

parliamentary 2 Min Read
Default Image

ஜூலை 19-ல் நாடாளுமன்ற கூட்டத்தொடர்..!

ஜூலை 19ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஜூலை மாதம் கூட நடைபெறவேண்டிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காலதாமதாக செப்டம்பர் மாதம் நடைபெற்றது. 18 நாட்கள் நடைபெற வேண்டிய கூட்டத்தொடர்  11 நாட்கள் மட்டுமே நடந்தது. பின்னர், டிசம்பர் மாதம் நடைபெறவேண்டிய குளிர்கால கூட்டத்தொடர் பல்வேறு காரணங்களுக்காக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் […]

parliamentary 2 Min Read
Default Image

உங்கள் கொள்கையை விட நாட்டின் சட்டம் தான் முக்கியம் – ட்விட்டர் நிறுவனத்திற்கு நாடாளுமன்ற குழு சம்மன்!

இந்திய மண்ணின் சட்டம் தான் முக்கியம், உங்கள் கொள்கை முக்கியமல்ல என ட்விட்டர் நிறுவன பிரதிநிதிகளிடம் நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது. ட்விட்டர் தளத்தை தவறாக பயன்படுத்துவது மற்றும் பயனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக் குழு கடந்த வாரம் டுவிட்டர் நிறுவனத்திற்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பியுள்ளது. இதன்படி, டுவிட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான பொதுக்கொள்கை மேலாளர் சகுப்தா காம்ரன், சட்ட கவுன்சில் ஆயுஷி கபூர் நேற்று நாடாளுமன்ற நிலைக்குழு […]

#Twitter 4 Min Read
Default Image

நாடாளுமன்ற உணவு மானியம் ரத்து… உணவு விலை பட்டியலில் மாற்றம்..!

நாடாளுமன்றத்தில் உள்ள கேன்டீனில் உறுப்பினர்களுக்கும் மானிய விலையில் உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், எம்.பி.க்கள் மிக குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருவதாக பலரும் விமர்சனம் செய்தனர். இந்நிலையில், மானிய விலை உணவு வழங்குதை ரத்து செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இதுகுறித்து ஓம் பிர்லா கூறுகையில், நாடாளுமன்ற கேன்டீன் உணவு மானியம் ரத்து செய்யப்பட்டால் ஆண்டுக்கு ரூ.8 கோடி மிச்சமாகும் என தெரிவித்தார். இந்த புதிய விலை பட்டியல் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று […]

Food 2 Min Read
Default Image

இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கம்.!  

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பொதுவாக ஜூலை முதல் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் வரை நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் கூட்டத்தொடர் தொடங்க முடியவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடர் திட்டமிட்ட காலத்திற்கு 12 நாட்கள் முன்பாகவே (மார்ச் 23) முடிக்கப்பட்டதால், இரு கூட்டத் தொடர்களுக்கு இடையே 6 மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது என்பதால் மழைக்கால கூட்டத்தொடரை விரைவில் தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இந்நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று முதல் […]

monsoonsession 3 Min Read
Default Image

பார்வையாளர்களுக்கு தடை – நாடாளுமன்ற மக்களவை செயலாளர் அறிவிப்பு.!

வருகிற 11ம் தேதி முதல் நாடாளுமன்றத்தை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக, மக்களவை செயலர் சினேலதா ஸ்ரீவாஸ்தவா அறிவித்துள்ளார். இது குறித்து அவர், வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2ம் தேதி கூடிய நாடாளுமன்றம், எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் முடங்கி வருகிறது. இந்த நிலையில், நேற்று காலை மாநிலங்களவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை […]

Lok Sabha Secretary 2 Min Read
Default Image

எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ்.!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்க உள்ளது.  இந்த நிலையில் டெல்லி வன்முறை குறித்து மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க கோரி காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளன. அதேபோல், டெல்லி வன்முறை தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

notice 2 Min Read
Default Image

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் வேலையின்மை குறித்து சர்வே வெளியீடு..!!

நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற சூழலில் வேலையின்மை குறித்த சர்வே வெளியிடப்பட்டுள்ளது. வேலையின்மை குறித்து தேசிய மாதிரி நிறுவனம் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் முடிவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த 2017-18ம் ஆண்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகவும் , அந்த விகிதம் 6.1 சதவீதமாக அதிகரித்து இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. மேலும் அந்த ஆய்வறிக்கையில் கடந்த 1972-73ம் ஆண்டு நிலவிய வேலையின்மைக்கு சமமாக இந்த ஆண்டிற்க்கான வேலையின்மை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்த வேலையின்மை அறிக்கையில் மேலும் சொல்லப்பட்டதில் நகர்ப் புறங்களில் வேலையின்மையின் அளவு 7.8 சதவீதமாகவும், […]

#BJP 3 Min Read
Default Image