டெல்லி:நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் முன்கூட்டியே இன்று நிறைவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் “கட்டுப்பாடற்ற முறையில்” நடந்து கொண்டதாக கூறி 12 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து,நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கிய நிலையில்,முதல் நாளில் இருந்தே 12 எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து […]