தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சி (தேமுதிக ) தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நிலை கருத்தில் கொண்டு கட்சி நிகழ்வில் கூட பெரும்பாலும் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதை அடுத்து வெளிநாடுகளுக்கு சென்றும் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை மியாட் (MIOT) மருத்துவமனையில் விஜயகாந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக […]