பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அவசர நடவடிக்கையாக, 1,200 சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர். இதனால், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை ஏற்பட்ட இந்த தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்க போராடி மதியம் பொழுதில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. முதற்கட்ட […]
பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள மயோட் (Mayotte) தீவானது அண்மையில் வீசிய புயலால் பெரும் பொருட்சேதத்தையும், உயிர்சேதத்தையும் எதிர்கொண்டுள்ளது. இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் ஆயிரத்தை கடந்துள்ளது. இன்னும் மீட்புப்பணிகள் தொடர்வதால் உயிர்சேத எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான, மயோட் தீவானது, இந்திய பெருங்கடலில், ஆப்பிரிக்க தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இது அந்நாட்டு தலைநகர் பாரிசில் இருந்து 5000 மைல்களுக்கு அப்பால் உள்ளது. இது ஏழ்மையான பகுதியாக பார்க்கப்படுகிறது. சுமார் […]
பாரிஸ் : மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி மிகச்சிறப்பாகவே விளையாடி வருகிறது. இதுவரை இந்திய அணி ஏழு பதக்கங்களை வென்று குவித்துள்ளது. அதில், முன்னதாக 100மீ. பாரா ஓட்டப்பந்தயத்தில் பிரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அதன் பிறகு நேற்று நடைபெற்ற 200மீ. பாரா ஒட்டப்பந்தய போட்டியில் பிரீத்தி பால் மீண்டும் வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார். ஒலிம்பிக் தொடரில் விளையாடிய மனு பாக்கரை போல 2 பதக்கங்களை ஒரே ஒலிம்பிக் தொடரில் வென்று […]
பாரிஸ் : நடைபெற்று வரும் பாரிஸ் பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு 4-வது பதக்கத்தை சேர்த்துள்ளார் மணீஷ் நார்வால். பாராலிம்பிக் தொடரில் இன்று ஆண்களுக்கான 10மீ. ஏர் பிஸ்டல் இறுதி போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்ட மணிஷ் நர்வால் பங்கேற்று விளையாடினார். தொடக்கம் முதலே போட்டியில் ஆதிக்கம் செலுத்திய அவர் மிகச்சிறப்பாக விளையாடி வந்தார். இதன் மூலம் நிலையான புள்ளிகளை பெற்று வந்த மணீஷ், தென்கொரிய வீரரான ஜோ ஜியோங்கிற்கு […]
பாரிஸ் : மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய நிலையில், துவக்க நிகழ்ச்சியில் தொடர் ஜோதியை பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் ஏந்திச் சென்றார். பாராலிம்பிக்கில் இந்தியா கடந்த ஜூலை 25-ஆம் தேதி நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நகரின் தலைநகரமான பாரிஸில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது. இந்த போட்டிகளுக்கான இ தொடக்க விழாவில் கலை நிகழ்ச்சிகள், நடனம், சாகசங்கள், பாராலிம்பிக் போட்டிகளில் […]
பாரிஸ் : இந்த ஆண்டிற்கான சம்மர் ஒலிம்பிக் போட்டிகளானது பிரான்சில் உள்ள பாரிசில் கடந்த ஜூலை-26 தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த ஒலிம்பிக் தொடரில், போட்டிகள் தொடங்குவதற்கு முன் ஒரு சில காரணங்களுக்காக சில நாடுகளுக்கு தடை விதிப்பது வழக்கம் தான். அதே போல இந்த ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் தொடருக்கு முன் ரஷியா மற்றும் பெலருஸ் எனும் 2 நாடுகளுக்கு சர்வேதச ஒலிம்பிக் கமிட்டி […]
டெல்லி : பாரிஸ் ஒலிம்பிக்கில், மகளிருக்கான 50 கிலோ மல்யுத்தப் போட்டியில், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடை பிரிவில் விளையாடிய வினேஷ் போகத் 100 கிராம் கூடுதல் எடை காரணமாக இன்று காலை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெறும் இறுதி போட்டியில் தனது எடையை குறைப்பதற்காக நேற்றைய நாள் இரவு முழுவதும் கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை 2 கிலோ வரை அவர் குறைத்ததாக […]
பாரிஸ் : உலக நாடுகள் பங்கேற்று விளையாடி வரும் தொடரான ஒலிம்பிக் தொடரானது தற்போது பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் மகளீருக்கான 50 கி எடை பிரிவில் இந்திய அணியின் சார்பாக வினேஷ் போகத் கலந்து கொண்டு விளையாடி வந்தார். இவர் நேற்று 50 கிலோ எடைப்பிரிவில் மல்யுத்த போட்டியில் காலிறுதி சுற்றில் ஜப்பானை சேர்ந்த வீராங்கணையான யுய் சுசாகியையும், அடுத்து அரையிறுதியில் கியூபாவின் யுஸ்னிலிஸ் குஸ்மானையும் தோற்கடித்து இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளார். இந்தியாவிற்கு இந்த ஒலிம்பிக்கில் […]
பாரிஸ் : பிரான்ஸ் தலைநகரமான பாரிஸில் தற்போது 33-வது ஒலிம்பிக் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் சார்பாக பல வீரர் மற்றும் வீராங்கனைகள் பல போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்திய அணி இது வரை 3 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மகளீருக்கான 50கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்த போட்டியில் இந்திய அணியின் சார்பாக வினேஷ் போகட் கலந்து கொண்டு விளையாடி வந்தார். இவர் தனது தனிப்பட்ட […]
பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் 33-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஈட்டி எறிதல் போட்டியானது இன்று நடைபெற்றது. ஏனெனில் கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா கலந்து கொள்வார் என்பதால் அதிகம் எதிர்பார்ப்பு என்பது இருந்து வந்தது. இந்நிலையில், அதற்கான தகுதி சுற்றுப் போட்டியானது இன்று நடைபெற்றது. 32 வீரர்கள் பங்கேற்று விளையாடும் இந்த தகுதி சுற்று 2 கட்டங்களாக நடைபெற்றது. இதில் 32 […]
ஒலிம்பிக் : டோக்கியோ, ரியோ, பாரிஸ், சொச்சி போன்ற இடங்களில் 4 வருடத்திற்கு ஒரு முறை நடைபெற்று வரும் இந்த ஒலிம்பிக் தொடரில் பல உலகநாடுகளும், பல வீரர், வீராங்கனைகளும் கலந்து கொண்டு விளையாடி பதக்கங்களை வென்று தங்களது நாட்டிற்கு பெருமைகள் சேர்ப்பார்கள். ஒரு விளையாட்டின் மீதுள்ள ஒரு ரசிகனாய் நாமும் அதனை கண்டு மகிழ்வோம். ஆனால், என்றைக்காவது நாம், எதற்காக இந்த 4 வருட இடைவேளை விட்டு இந்த ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகிறார்கள் என்று யோசித்திருக்கோமா? […]
பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் நகரின் தலைநகரமான பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் நேற்றைய 6-வது நாளின் இறுதியில் நடைபெற்ற பேட்மிண்டன் தகுதி சுற்று போட்டியில் இந்திய அணியின் சார்பாக பிவி.சிந்து கலந்து கொண்டு விளையாடினார். நடைபெற்ற இந்த போட்டியில் சீனாவின் வீராங்கணையான ஹி பிங்க் ஜியாவோவை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஜியாவோ ஆதிக்கம் செலுத்தினார். இதன் விளைவாக முதல் செட்டை 19-21 என்று இழந்தார். அதை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது […]
பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் நாட்டின் தலைநகராமான பாரிஸில் தொடர்ந்து 3-வது நாளாக இன்று ஒலிம்பிக் போட்டிகளானது நடைபெற்று வருகிறது. இன்றைய நாளில் ஆண்கள் பிரிவுக்கான இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி மற்றும் ஜெர்மனி வீரர்கள் இடையே பேட்மிண்டன் போட்டி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், எதிரணியான ஜெர்மனி வீரர்கள் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்கள். இதனால், நடைபெற இருந்த அந்த போட்டி ரத்தானது. இதன் காரணமாக குரூப் C […]
பாரிஸ் ஒலிம்பிக் 2024 : பிரான்ஸ்சின் தலைநகரமான பாரிஸில் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த தொடக்க விழாவானது பாரீசின் புகழ் பெற்ற சென் நதி கரையில் நடத்தப்படுகிறது. இந்த விழாவில் அனைத்து வீரர்களின் அணிவகுப்பு அலங்கரிக்கப்பட்ட படகில் நடைபெறுகிறது. இந்த அணிவகுப்பு சென் நதியில் ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தில் தொடங்கி சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று பான்ட் […]
பாரிஸ் ஒலிம்பிக் 2024 : பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் ஒலிம்பிக் போட்டி தொடங்கவுள்ளதால் பாரிஸ் மாகாணம் களைகட்டி வருகிறது. உலகம் முழுவதும் பெரிதளவு எதிர்பார்க்கப்படும் விளையாட்டு போட்டி தான் ஒலிம்பிக் போட்டிகள், உலக நாடுகள் பங்கேற்கும் இந்த ஒலிம்பிக் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவதால் உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும். இந்த மிகப்பெரிய ஒலிம்பிக் திருவிழாவானாது நாளை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த […]
ஒலிம்பிக் 2024 : ஒலிம்பிக் போட்டிகளில், நடைபெற இருக்கும் நீச்சல் போட்டி நடைபெற இருக்கும் நதியில் மோசமான கிருமிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை-26ம் தேதி பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் தொங்கவிருக்கிறது. இந்நிலையில், துவக்க நிகழ்ச்சிகளும், நீச்சல் போட்டிகளும் நடைபெற உள்ள நதியில் திடீரென மோசமான கிருமிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒலிம்பிக் போட்டிகள் துவங்கும் பொழுது எப்போதும் துவக்க நிகழ்ச்சிகளை தொடங்கியே ஆரம்பிக்கப்படும். அந்த நிகழ்ச்சியில் ஒரு சில நிகழ்வுகள் பாரிஸில் அமைந்துள்ள சீன் நதியில் […]
பிரான்ஸ் : கடந்த சனிக்கிழமை அன்று காலை 9 மணி அளவில் 3 மர்ம நபர்கள் பிரெஞ்சுக் கொடி சுற்றப்பட்ட 5 சவப்பெட்டிகளை ஈபிள் டவர் அடியில் வைத்து விட்டு தப்பி சென்றுள்ளார்கள். அந்த பெட்டிகளுக்குள் ஜிப்ஸம் என்னும் ரசாயனம் இருந்துள்ளதாக காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும், அந்த சவப்பெட்டிகளை வேனில் ஏற்றி கொண்டுவந்த பல்கேரிய நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட, பெர்லினுக்கு ரயிலில் தப்பிச செல்ல முயன்ற வேறு 2 பேரையும் போலீசார் அதிரடியாக கைது […]
சென்னை: பிரான்ஸின் நியூ கலிடோனியாவில் நடந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால், அவசரநிலையை பிறப்பித்தது அந்நாட்டு அரசாங்கம். பாரிஸில் நேற்றைய தினம் புதியதாக ஏற்றப்பட்ட மசோதாவுக்கு எதிராக கலவரம் வெடித்தது. தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான கலவரத்தில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டபோது, கனக் என்ற இளம் பழங்குடியினரை சேர்ந்த மூன்று பேரும், ஒரு போலீஸ் அதிகாரியும் உயிரிழந்தனர். இதனையடுத்து, பசிபிக் தீவான நியூ கலிடோனியாவில் இன்று அவசரகால உத்தரவை பிறப்பித்தது பிரான்ஸ் அரசு. அதன்படி, இன்று […]
ருமேனியாவை தளமாகக் கொண்ட லெஜண்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஏர்பஸ் ஏ-340-வானது கடந்த வியாழன் அன்று ஐக்கிய அரபு நாட்டில் இருந்து அமெரிக்காவில் நிகரகுவா எனும் இடத்திற்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 303 பயணிகள் பயணித்துள்ளார். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். அதில் 11 சிறார்களும் அடக்கம். .24 மணிநேரத்தில் 201 பேர் பலி.! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலிடம் வலியுறுத்தல்.! இந்த விமானமானது, இடையில் எரிபொருள் நிரப்பும் பொருட்டு பாரிஸில் இருந்து 150 கிமீ தொலையில் வத்ரி […]
ஃபிஃபா உலககோப்பையின் பிரான்ஸ் தோல்வியை அடுத்து, அந்நாட்டின் பாரிஸ் மற்றும் பிற நகரங்களில் கலவரங்கள் வெடித்தன. ஃபிஃபா கால்பந்து உலககோப்பை 2022இன் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணிக்கு எதிராக அர்ஜென்டினா பெனால்டி முறையில் நடந்த டை-பிரேக்கரில் 4-2 என்ற கோல்கணக்கில் வென்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்த தோல்வியை அடுத்து பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் மற்றும் பிற நகரங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். பல பிரெஞ்சு நகரங்களின் தெருக்களில் மோதல்கள் வெடித்ததால், கலவரத்தை அடக்க பிரெஞ்சு போலீசார், கால்பந்து […]