சமீபத்தில் ஒரு பெண்,தனது கணவன் மற்றும் மாமியார் தனது குழந்தைகளை நான்கு நாட்களுக்கு பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக,பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகளிடமிருந்து காதலை (அன்பையும்,பாசத்தையும்) பெற குழந்தைகளுக்கு உரிமை உண்டு என்றும் மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மனைவியின் அனுமதி: 38 வயதான தந்தை ஒருவர்,கடந்த 22 மாதங்களாக தனது குழந்தைகளை சந்திக்க மனைவி தன்னை அனுமதிக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.மேலும், அம்மனுவில்,குழந்தைகளின் தந்தை வழி தாத்தா உடல்நலம் பாதிக்கப்பட்டு […]