நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இமய மலைப்பகுதிகளில் பருவக்காற்று தொடங்கியதுடன் பலத்த கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்படுகிறது. இந்நிலையில் நேபாளத்தில் உள்ள பார்பட் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சில பேர் சிக்கி உள்ளனர். இதனை தொடர்ந்து மீட்கும் பணியில் உள்ள மீட்புப்படையினர், இதுவரை அப்பகுதியில் 6 உடல்களை மீட்டுள்ளனர். மேலும், இரண்டு பேர் காணாமல் போய் உள்ளனர் என்று இது குறித்து […]