ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சசிகலா, அப்போலோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி, பிரீத்தா ரெட்டி உள்ளிட்டோருக்கும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, ப்ரீத்தா ரெட்டி ஆகியோர் 10 நாட்களுக்குள் விசாரணை ஆணையம் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென்றும், அதேபோல் 15 நாளில் பதிலளிக்குமாறு சசிகலாவுக்கும் கால அவகாசம் கொடுத்து சம்மன் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.