சென்னை : காஞ்சிபுரத்தில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் இந்த நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு மேலும் 147.11 ஏக்கர் நிலம் (67 ஹெக்டேர்) கையகப்படுத்துவதற்கான அனுமதி ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான நிலம் எடையார்பாக்கம் கிராமத்தில் கையகப்படுத்தப்பட உள்ளது. ஆட்சேபனை […]