பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக 13 கிராம மக்களுடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை. பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு, அன்பரசன் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் 13 கிராம மக்களின் பிரதிநிதிகளும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். 13 கிராம மக்களின் கோரிக்கைகள், நிலம் கையகப்படுத்தும் பணி, இழப்பீடு உள்ளிட்டவை பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது.
பரந்தூர் விமான நிலையம் திட்டம் தொடர்பாக சென்னையில் நாளை அமைச்சர்கள் குழு ஆலோசனை. பரந்தூர் விமான நிலையத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து இன்று மக்கள் பேரணி நடைபெற்றது. ஏகனாபுரம் உள்பட 13 கிராம மக்கள் மற்றும் விவசாய அமைப்பினர் கருப்புக்கொடியுடன் பேரணி சென்றனர். மக்கள் பேரணியை தொடர்ந்து, கோட்டாட்சியர், டிஎஸ்பி, தாசில்தாரர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பேரணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து […]
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான மக்களின் பேரணி பேச்சுவார்த்தையை அடுத்து கைவிடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர் போராட்ட குழுவினர். அமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக முடிவு செய்துள்ளனர். பரந்தூர் விமான நிலையத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து இன்று மக்கள் பேரணி நடைபெற்றது. ஏகனாபுரம் உள்பட 13 கிராம மக்கள் மற்றும் விவசாய அமைப்பினர் […]
விமான நிலையங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள் ஜனவரி 6 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு. பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக தொழில்நுட்பம், பொருளாதார அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசகர்களை வரவேற்று டிட்கோ விளம்பரம் செய்துள்ளது. சர்வதேச அளவிலான ஆலோசனை நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது தமிழக அரசு. விமான போக்குவரத்தின் வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும் என டிக்கோ நிபந்தனை விதித்துள்ளது. 4,970 ஏக்கர் பரப்பில் புதிய விமான நிலையம் பரந்தூரில் அமைகிறது. […]
தமிழக தொழில் வளர்ச்சிக்கு 2-வது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம் என தமிழக அரசு அறிக்கை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 24 ஆண்டுகளாக இரண்டாவது விமான நிலையம் குறித்து பேசப்பட்டாலும், தற்போதுதான் அதற்கான அமைவிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதை மத்திய விமான போக்குவரத்துக்கு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் விமான நிலையம் அமைய சாத்தியமான […]
பிஆர் பாண்டியனை தமிழக காவல்துறை கைது செய்து இருப்பது அவசியமற்றது என்று சசிகலா கண்டனம். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை எதிர்த்து அரசியல் கட்சி தலைவர்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், பரந்தூரில் விமான நிலையத்தை எதிர்த்து அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க சென்ற விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் காஞ்சிபுரம் மாவட்ட […]
விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையால் கைது. பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் நடத்தி வரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்க சென்ற விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையால் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்ட எல்லையான தொழுப்பேடு சுங்கச்சாவடியில் பி ஆர் பாண்டியன் கைது செய்யப்பட்டு பெருநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பி.ஆர்.பாண்டியன் கைது செய்யப்பட்டதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.