பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் சொந்த ஊருக்கு வந்த நிலையில் அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மாரியப்பன் தொடந்து இரண்டாவது முறையாக பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார். தற்போது நடந்து முடிந்த பாராலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில் 1.86 மீட்டர் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றார். தற்போது இவரது சொந்த ஊரான சேலம் அருகே உள்ள பெரிய வடகம்பட்டிக்கு திரும்பியுள்ள […]
இந்திய விளையாட்டு வரலாற்றில், டோக்கியோ பாராலிம்பிக்கிற்கு எப்போதுமே ஒரு சிறப்பு இடம் இருக்கும் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான 16ஆவது பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தது. டோக்கியோ பாராலிம்பிக் போட்டி வரலாற்றில் அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2012ல் லண்டனில் 1 பதக்கம், 2016ஆம் ஆண்டு ரியோவில் 4 பதக்கம் வென்ற இந்தியா, தற்போது நடைபெற்று வரும் டோக்கியோ பாராலிம்பிக்கில் 19 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. […]
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டனில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான 16ஆவது பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று காலை நடைபெற்ற பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் ஆடவா் ஒற்றையா் எஸ்எச்.6 பிரிவில் ஹாங்காங் வீரர் மன் காய் சூவை எதிர்கொண்ட இந்தியா வீரர் கிருஷ்ணா நாகர் 2-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்தார். இதன்முலம் டோக்கியோ பாராலிம்பிக்கில் […]
பாராலிம்பிக் ஆடவர் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் வெண்கல பதக்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் வில்வித்தை அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீரர் ஹர்விந்தர் சிங், வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் விளையாடி பதக்கத்தை வென்றுள்ளார். வெண்கலப் பதக்கப் போட்டியில் ஹர்விந்தர் சிங், தென் கொரியாவின் கிம் மின் சூவை வீழ்த்தியுள்ளார். வில்வித்தையில் வெண்கலம் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, பாராலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 2 […]
டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் வில்வித்தை அரையிறுதியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் தோல்வி. டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் வில்வித்தை அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீரர் ஹர்விந்தர் சிங், வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் விளையாட உள்ளார். வெண்கலப் பதக்கப் போட்டியில் ஹர்விந்தர் சிங், கொரியாவின் கிம் மின் சுவை எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடப்படுகிறது.
டோக்கியோ பாராலிம்பிக்கில் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் தங்க பதக்கம் வென்ற சுமித்-க்கு முதல்வர் வாழ்த்து. டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவின் சுமித் அண்டில், ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் அதிகபட்சமாக 68.55 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து உலக சாதனை படைத்ததை தொடர்ந்து, தங்கம் பதக்கம் வென்றார். இவர் 66.95, 68.08, 68.55 மீட்டர் கணக்கில் தன் சாதனையை ஒரே போட்டியில் 3 முறை முறியடித்து, தனி சாதனை படைத்துள்ளார். இவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் […]
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கத்தை பெற்று தந்தார் சுமித் அண்டில். டோக்கியோ பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் உலக சாதனை படைத்துள்ளார். அதாவது ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இரண்டாவது சுற்றில் பாராலிம்பிக்கில் இதுவரை இல்லாத அளவிற்கு 68.08 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து இந்திய வீரர் உலக சாதனை படைத்துள்ளார். ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் 68.08 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து முதலிடத்தில் இருப்பதன் […]
டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெஹாராவுக்கு ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு. டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெஹாராவுக்கு ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அறிவித்துள்ளார். ஆண்கள் ஈட்டி எறிதல் எஃப் 46 போட்டியில் வெள்ளி வென்ற தேவேந்திர ஜஜாரியாவுக்கு ரூ.2 கோடியும், வெண்கலம் வென்ற சுந்தர் சிங் குர்ஜாருக்கு ரூ.1 கோடியும் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். டோக்கியோ […]