பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் கடந்த ஆகஸ்ட் 29 ம் தேதி கோலாகலமாக தொடங்கியது பாராலிம்பிக் தொடர். மாற்றுத்திறனாளிகளுக்காகவே நடத்தப்பட்ட இந்த தொடர் 17-வது பாரா ஒலிம்பிக் தொடராகும். இதில் பல உலக நாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி அவர்களது திறமையை வெளிக்காட்டி வந்தனர். கடந்த 11 நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த அனைத்து போட்டிகளும் நேற்று நிறைவடைந்து. இந்த நிலையில், நேற்று இரவு நிறைவு விழா கோலாகலமாக வாணவேடிக்கைகளுடன் நடைபெற்றது. இந்த […]
பாரிஸ் : நடைபெற்று வரும் பாராலிம்பிக் தொடரில் பாரா தடகளத்தில் ஷாட் புட் பிரிவில் இந்திய அணியின் சார்பாக ஹோகாடோ ஹோடோஷே செமா பங்கேற்று விளையாடினார். இதில் சிறப்பாக விளையாடிய அவர் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்று சாதித்து இருக்கிறார். வெண்கல பதக்கம் வென்ற ஹோகாடோ ஹோடோஷே நாகாலாந்தைச் சேர்ந்தவர் ஆவார். சாதாரண விவசாயின் மகனாகப் பிறந்த இவர் சிறு வயது முதலே ராணுவத்தின் மீது காதல் கொண்டவர் ஆவார். அதற்காகவே தன்னை […]
பாரிஸ் : மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராலிம்பிக் முடிவடையும் நாளை நெருங்கி வருகிறது. இந்த நிலையில், இந்திய அணி 6 தங்க பதக்கம், 9 வெள்ளி பதக்கம், 12 வெண்கல பதக்கம் என மொத்தம் 27 பதக்கங்கள் வென்றுள்ளது. மேலும், பதக்கபட்டியலில் 17-வது இடத்திலும் இருந்து வருகிறது. பாராலிம்பிக் 2024-ல் தொடரில் இந்திய அணி இதுவரை இல்லாத அளவிற்கு பதக்கங்களை வென்று அசத்தி இருக்கிறது. இன்னும் 2 நாட்களே இருப்பதால் இந்திய அணி 30 பதக்கங்களுக்கு மேலும் வெல்வார்கள் […]
பாரிஸ் : நடைபெற்று வரும் 17-வது பாராலிம்பிக் தொடரில் இன்று 5 பதக்க போட்டிகளில் விளையாடி வருகிறது. அதில் ஒரு போட்டியாக தற்போது நடைபெற்ற போட்டி தான் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்டு விளையாடிய பிரவீன் குமார் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் இறுதி போட்டியில் கலந்து கொண்ட இவர் 2.08 மீ வரை உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தட்டி சென்றுள்ளார். மேலும், இவர் தாண்டிய இந்த […]
பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி இது வரை இல்லாத அளவிற்கு வரலாற்று சாதனை படைத்து வருகிறது. இந்திய அணி இது வரை 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களை வென்றுள்ளது. இந்த நிலையில், இன்று பாராலிம்பிக் தொடரின் 9-வது நாள் நடைபெற உள்ளது. இன்றும் இந்திய அணி 5 பதக்கப் போட்டிகளில் விளையாடவுள்ளனர். நேற்றைய நாள் நடைபெற்ற […]
பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராலிம்பிக் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 7-ஆம் நாள் போட்டிகளில் இந்திய அணி 2 தங்கம், 2 வெள்ளி பதக்கங்ள் என மொத்தம் 4 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக இந்திய அணி இதுவரை 5 தங்கப் பதக்கம், 6 வெள்ளி பதக்கம் மற்றும் 10 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 24 பதக்கங்களை வென்று பதக்கபட்டியலில் 13-வது இடத்தில் இருந்து […]
சென்னை : பிரான்ஸ் நகரின் தலைநகரான பாரிஸில் 17-வது பாராலிம்பிக் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில், உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய தமிழக வீரரான தங்கவேலு மாரியப்பன் வெண்கல பதக்கம் வென்றார். மேலும், தொடர்ச்சியாக 3 முறை பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனால், முதல் முறையாக தொடர்ச்சியாக ஹாட்ரிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மாரியப்பன் தங்கவேலு : சேலம் மாவட்டத்தில் பெரியவடக்கம்பட்டி எனும் […]
பாரிஸ் : பாராலிம்பிக் தொடரின் 7-ஆம் நாள் போட்டிகள் இன்று நடைபெற இருக்கிறது. இந்த நாளில் இந்திய அணி 11 போட்டிகளில் விளையாடவுள்ளது. ஆனால், அதில் மொத்தம் 7 பதக்கப் போட்டிகளில் இந்திய அணி குறிவைத்துள்ளது. இந்திய அணியின் புதிய சாதனை : இதுவரை நடைபெற்ற பாராலிம்பிக் 2024 தொடரில் இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களை வென்று பதக்கபட்டியலில் 19-வது இடத்தில் வகித்து வருகிறது. கடந்த, 2020ம் […]
சென்னை : நடைபெற்று வரும் பாராலிம்பிக் தொடரில் நேற்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரரான மாரியப்பன் தங்கவேலு வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். தொடர்ச்சியாக 3 பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் 17-வது பாராலிம்பிக் தொடரில் நேற்று 6-ஆம் நாளுக்கான போட்டிகள் நடைபெற்றது. அதில், பாரா தடகளத்தில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாகத் […]
பாரிஸ் : மாற்றுதிறனாளிகளுக்காக பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் 17-வது பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி இதுவரை மொத்தம் 15 பதக்கங்களை (3 தங்கம், 5வெள்ளி, 7 வெண்கலம்) வென்று பதக்கபட்டியலில் 15-வது இடத்தில் இருந்து வருகிறது. அதில், நேற்று மட்டுமே இந்திய அணி மொத்தமாக 7 பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணி இன்று அதிகப்போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் முக்கியமாக 5 பதக்கப்போட்டிகளில் கலந்து கொள்கிறது. இதனால், இன்றைய நாளும் இந்தியாவுக்கு […]
பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் 17-வது பாராலிம்பிக் தொடரின் 5-ஆம் நாள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று வரை இந்திய அணி 7 பதக்கங்களை வென்ற நிலையில் இன்றைய நாளில் ஒரு தங்கம் மட்டும் ஒரு வெள்ளி என 2 பதக்கங்களைக் குவித்துள்ளது. இன்று மதியம் நடைபெற்ற ஆண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்தியா அணி சார்பாக விளையாடிய நிதேஷ் குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனால், இந்த பாராலிம்பிக் தொடரில் […]
பாரிஸ் : நடைபெற்று வரும் பாராலிம்பிக் தொடரின் இன்றைய 3-ஆம் நாளில் இந்திய அணியில் தொடர்ச்சியாக 6 பதக்கப் போட்டிகளில் விளையாடவுள்ளது. பாரிஸ் நகரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பராமலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில், நேற்று நடைபெற்ற இந்திய அணி போட்டிகளில் இந்தியா 4 பதக்கங்களை ஒரே நாளில் வென்று சாதனை படைத்துள்ளது. அதன்படி 1 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் பதக்ககங்களை இந்தியா கைவசப்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 100மீ. பாரா […]
பாரிஸ் : மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய நிலையில், துவக்க நிகழ்ச்சியில் தொடர் ஜோதியை பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் ஏந்திச் சென்றார். பாராலிம்பிக்கில் இந்தியா கடந்த ஜூலை 25-ஆம் தேதி நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நகரின் தலைநகரமான பாரிஸில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது. இந்த போட்டிகளுக்கான இ தொடக்க விழாவில் கலை நிகழ்ச்சிகள், நடனம், சாகசங்கள், பாராலிம்பிக் போட்டிகளில் […]
பாரிஸ் : ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக இன்று தொடங்கியது. தற்போது நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நகரின் தலைநகரமான பாரிஸில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடக்க விழாவில் கலை நிகழ்ச்சிகள், நடனம், சாகசங்கள், பாராலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து நாட்டு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த தொடக்க விழாவை இன்று […]
பாரிஸ் : மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராலிம்பிக் தொடரானது இன்று பாரிஸில் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. உலகம் முழுவதும் மிகப்பெரிய விளையாட்டு தொடராகக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்று முடிவடைந்திருந்து. அதனைத் தொடர்ந்து இன்று இரவு பாரிஸில் பாராலிம்பிக் தொடரானது கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தமாக 180 நாடுகளில் 4,440 வீரர்/வீராங்கனைகள் பங்கேற்று விளையாடவுள்ளனர். இந்த தொடரில் இந்தியா சார்பாக மொத்தம் 84 வீரர், வீராங்கனைகளுடன் களமிறங்கவுள்ளனர். கடந்த 2020 பாராலிம்பிக் தொடரில் இந்திய […]
பாரிஸ் : சமீபத்தில் முடிவடைந்த இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து நாளை (ஆகஸ்ட் 28) பல்வேறு குறைபாடுகள் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான பாராலிம்பிக்ஸ் தொடங்க உள்ளன. நாளை தொடங்கும் இந்த பாராலிம்பிக் ஒலிம்பிக் தொடரானது வரும் செப்.8 (ஞாற்றுக்கிழமை) வரை நடைபெற இருக்கிறது. மொத்தமாக 170 நாடுகள் இந்த பாராலிம்பிக் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அதே போல இந்த முறை இந்தியா தரப்பில் 84 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இது இந்தியாவைப் பொறுத்தவரை […]