பாராலிம்பிக் குழுவுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடி வருகிறார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பிறகு, ஜப்பானின் டோக்கியோவில் கோடைகால பாராலிம்பிக்கில் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளது. டோக்கியோ பாராலிம்பிக் போட்டி வரும் 25-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் செப்டமபர் 6-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 9 விளையாட்டுகளில் இந்தியாவின் சார்பில் இதுவரை இல்லாத அளவிற்கு 54 பேர் இதில் பங்கேற்கின்றனர். இதனிடையே, டோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்லுபவர்களுக்கு இந்த ஆண்டு தேசிய விளையாட்டு விருதுகள் […]