அதிர்ச்சி…பாராலிம்பிக் வட்டு எறிதலில் வெண்கலம் வென்ற வினோத் குமாருக்கு நேர்ந்த சோகம்.!
பாராலிம்பிக் வட்டு எறிதலில் வெண்கலம் வென்ற வினோத் குமாரின் பதக்கம் திரும்ப பெறப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான எஃப் -52 வட்டு எறிதல் போட்டியில் இந்தியா வீரர் வினோத் குமார் பங்கேற்று,முதல் முயற்சியில் 17.46 மீட்டர் தூரம் வீசினார்.அதன்பின்னர் இரண்டாவது முயற்சியில் 18.32 மீட்டர் தூரமும், மூன்றாவது முயற்சியில் 17.80 மீட்டர் தூரமும் வீசினார். இதனைத் தொடர்ந்து,நான்காவது முயற்சியில் 19.12 மீட்டர் தூரமும், ஐந்தாவது முயற்சியில் அதிகபட்சமாக […]