டெல்லி: 2024ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விளையாட்டுத்துறையில் மிக உயரிய விருதான கேல் ரத்னா, உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஹர்மன்பிரீத் சிங்(ஹாக்கி), மனுபாக்கர் (துப்பாக்கிச் சுடுதல்) பிரவீன் குமார் (பாரா தடகள வீரர்) ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வரும் 17ம் தேதி குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் வைத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதுகளை வழங்க உள்ளார். […]