பப்புவா : பயங்கரமான நிலச்சரிவு பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலையில், அதில் சிக்கி 2,000க்கும் மேற்பட்டோர் உயிருடன் புதையுண்டுள்ளனர். கடந்த மே 24-ஆம் தேதி பப்புவா நியூ கினியாவின் யம்பலி கிராமத்தின் முங்காலோ மலையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மண்ணிற்குள் புதையுண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலச்சரிவில், 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து ராணுவம், தேசிய மீட்புக் குழுவினற்கு […]