பஞ்சாபில் மேலும் நான்கு எம்எல்ஏக்களுக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியா முழுவதும் தீவிரம் அடைந்து கொண்டே செல்லும் நிலையில், அதிக அளவில் முன் களப்பணியாளர்களாக பணியாற்றக்கூடிய அமைச்சர்கள் மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தான் இதன் பாதிப்பு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் பஞ்சாபில் கொரானா வைரஸ் தொடர்ந்து எம்எல்ஏக்களுக்கு பரவி வருகிறது. ஏற்கனவே 29 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 4 எம்எல்ஏக்களுக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. […]
பஞ்சாபில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் துவக்கி வைத்தார். பஞ்சாப் மாநிலத்திலுள்ள காங்கிரஸ் முதல்வர் அம்ரீந்தர் சிங் தான் தேர்தலில் வெற்றி பெற்றால் மாணவர்கள் அனைவருக்கும் ஸ்மார்ட் போன் தருவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த திட்டத்தை தற்பொழுது 92 கோடி மதிப்பில் பஞ்சாப் ஸ்மார்ட் கனெக்ட் ஸ்கீம் மூலம் தொடக்கி வைத்தார். ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைன் மூலமாக பயிற்றுவிக்க படுவதால், இந்த ஸ்மார்ட் […]
பஞ்சாப் அரசு அம்மாநிலத்திலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு யூனிட் 20,000 என 50,000 ரூபாய்க்கு பிளாஸ்மா வழங்க உள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பல இடங்களில் தற்பொழுது பிளாஸ்மா வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு கொண்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாகிய பஞ்சாபிலும் அரசு பிளாஸ்மா வாங்கி உள்ளது. இந்நிலையில், பஞ்சாபில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக பிளாஸ்மா வழங்கப்படும். ஆனால் தனியார் மருத்துவமனைகலீல் சிகிச்சை பெறுவோர் அதற்காக பெருந்தொகையை […]