உடலில் குளுக்கோஸ் ஏற்றிக்கொள்வதற்காக சிற்றுண்டி உண்பது நம்மில் பலரது வாடிக்கை. வீடுகளிலேயே இனிப்பு, காரம் செய்து சாப்பிட்ட காலமெல்லாம் மலையேறிப்போக, தெருவுக்குத் தெரு பானிபூரி, சில்லி சிக்கன் கடைகள் முளைத்து விற்பனையில் அசுர வளர்ச்சி கண்டிருக்கின்றன. சுற்றுச்சூழலே சுகாதாரமற்று இருக்கிறது. பூரியை பெருவிரலால் உடைத்து அதனுள் மசாலாவைத் திணித்து புதினா நீரில் முக்கி எடுக்கின்றனர். கை பெருவிரல் நகத்தில் படிந்திருக்கும் அழுக்கு பானிபூரியிலும் ஒட்டிக்கொள்ளும். பானிபூரி சுடுவதற்கான மாவை காலில் மிதிக்கிற புகைப்படம் சமீபத்தில் சமூக […]