பொய்வழக்குகளை எதிர்கொள்வதற்காக அதிமுக தலைமை சட்ட ஆலோசகர்கள் குழுவை அமைத்துள்ளது. பொய்வழக்குகளை எதிர்கொள்வதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து சட்ட ஆலோசகர்கள் குழுவை அமைத்துள்ளனர். மேலும்,இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் பலர் மீது, ஆளும் கட்சியினரின் தூண்டுதலால், பழிவாங்கும் எண்ணத்தோடு பொய் வழக்குகள் புனையப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. […]