மக்கள் திமுக ஆட்சி மீது மிகுந்த அதிருப்தியில் இருக்கின்றனர். கண்டா வர சொல்லுங்க. எடப்பாடியை கையோடு கூட்டி வாருங்கள் என ஏங்கி இருக்கின்றனர். – அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மேடையில் குறிப்பிட்டுள்ளார். இன்று அதிமுக சார்பில் விருதுநகரில் அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார். அதில் பேசிய முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், திமுக பற்றி சரமாரி குற்றசாட்டுகளை முன்வைத்தார். அதே போல, […]
அதிமுக அரசை குறை சொல்லி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு இருக்கின்ற வாக்குகளும் போய்விடும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசுத் தொகை மற்றும் பொங்கல் தொகுப்புகளை வழங்குவதற்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி அவற்றை கொடுக்கும் பணிகள் இன்று முதல் நடந்து வருகிறது. இதையடுத்து, திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு, […]
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அகழாய்வை தொடங்கியது. இதுவரை நடந்த 6 கட்ட அகழாய்வுகள் நடைபெறவுள்ளது. இதில், முதுமக்கள் தாழிகள், பாசிகள், பவளம், வரிவடிவ பானை ஓடுகள், உள்ளிட்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவற்றைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 12 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கையில் அதிமுகவுக்கு ஆதரவு தந்த விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆதரவு தருகிறேன் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குனரும் முன்னணி நடிகர் விஜய் அவர்களின் தந்தையும் ஆகிய எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் நேற்று விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் என்று கூறியிருந்தார். இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களையும், வரவேற்பையும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், 1.28 கோடி மதிப்பில் 19 […]
தலித் சமுதாய ஊராட்சி மன்ற தலைவரை அவமரியாதையாக நடத்தியது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை பெண் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி. இவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த ஜூலையில் நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த செயலை கண்டித்து பிரபலங்கள் பாலரும் தங்களது கண்டன குரலை எழுப்பி வருகிற நிலையில், […]
நடிகர் சூர்யா தற்பொழுது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷ் இசையைமத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை சூர்யா வின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் டிரைலர் மற்றும், தீம் மியூசிக் இரண்டு பாடல்களும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் மே-1 ரிலீஸ் தேதி ஆக இருந்தது ஆனால் தற்போது கொரோனா காரணமாக தற்போது வெளியிடவில்லை, மேலும் இந்த திரைப்படமும் இந்த ஆண்டு […]
தமிழகத்தில் அடுத்த பொது முடக்கத்துக்கு வாய்ப்பு உள்ளது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் 4-ஆம் கட்டமாக, மே-31 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள் இதுகுறித்து பேசுகையில், ‘தற்போதுள்ள சூழ்நிலை நீடித்தால், மேலும் சில தளர்வுக்காலுடன் அடுத்த […]
நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.மேலும் 58 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். ஆனால் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் இரவீந்திரநாத் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.இதனால் அதிமுக-வினர் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், அடுத்தக்கட்ட மத்திய அமைச்சரவை பட்டியலில் தமிழகத்திற்கு […]