குஜராத் காந்தி நகரில் உள்ள பண்டித் தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைகழகத்தில் (Pandit Deendayal Petroleum University)பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி கலந்துகொண்டார். அப்பொழுது முகேஷ் அம்பானி பேசுகையில்,அமித் ஷா ஒரு உண்மையான கர்மயோகி. நீங்கள் ஒரு உண்மையான இரும்புமனிதன் போன்றவர்.குஜராத் மற்றும் இந்தியா அமித்ஷாவால் பெருமைப்படுகிறது என்று தெரிவித்தார் முகேஷ் அம்பானி.