ஆப்பிரிக்கா : தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவில் பரவி வரும் குரங்கம்மை தொற்று பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குரங்கம்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா இன்று ஆலோசனை மேற்கொண்டார். 2019இல் சீனாவில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று 2020, 2021 என இரு ஆண்டுகள் உலகையே ஆட்டிப்படைத்தது. அதனால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. உலகளாவிய ஆராய்ச்சியாளர்களால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அந்த பெருந்தொற்றில் இருந்து மக்கள் மீண்டு வந்தனர். தற்போதும் அதன் பாதிப்புகள் உலகில் ஆங்காங்கே இருந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படியான சூழலில், […]
குரங்கு காய்ச்சலை ஒரு தொற்றுநோயாக அறிவித்தது உலக சுகாதார வலையமைப்பு (WHN). கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தொற்று பாதிப்பு சற்று குறைந்த நிலையில், உலக நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது. மறுபக்கம் மேற்கத்திய நாடுகளில் புதிதாக மங்கி பாக்ஸ் (Monkeypox) என அழைக்கப்படும் குரங்கு அம்மை பாதிப்பு […]
கொரோனா பெருந்தொற்று என்ற நிலையில், நிரந்தர நோயாக மாறும். ஆனாலும், மக்கள் விழிப்புடன் செயல்பட்டால், அச்சப்பட தேவையில்லை. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸை அழிக்க முடியவில்லை என்றாலும், இதனை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை ஒவ்வொரு நாட்டு அரசும் மேற்கொண்டு வருகிறது. தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் […]
முகமூடிகளின் குப்பை கழிவுகளில் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான இரசாயனம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வாசிங்டனில் உள்ள ஸ்வெனசா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதன்மூலம் உபயோகித்து அப்புறப்படுத்தப்பட்ட முகக்கவசம் நீரில் மூழ்கி வெளிவரும்போது அதில் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். ஆய்வறிக்கையின்படி பொதுவான உபயோகப்படுத்திய முககவசத்தில் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடிய சிலிக்கான் அடிப்படையிலான பிளாஸ்டிக், ஈயம், ஆண்டிமனி மற்றும் தாமிரம் உள்ளிட்ட அதிக அளவு மாசுபடுத்திகளை ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது. மேலும் புதுமையான பொருட்கள், செயலாக்கம் […]