ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டபடி கல்யாண வீட்டில் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோர் பகுதியில் உள்ள பைண்ட்சோடா மண்டி எனும் இடத்தில் நேற்று திருமண விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவினை கைதாகி சிறையில் இருக்கக் கூடிய சாமியார் ராம்பாலின் ஆதரவாளர்கள் நடத்தியுள்ளனர். இந்த விழாவின் போது அங்கு வந்த பத்து பதினைந்து பேர் கொண்ட கும்பல் திருமணம் தவறான முறையில் நடத்துவதாக கூறி சரமாரியாக தாக்கியுள்ளனர். பின் துப்பாக்கியுடன் […]
கடந்த 10 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றிய கேரளாவின் பத்னாபுரம் அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவராக கேரள பெண்மணி பதவியேற்றுள்ளார். 46 வயதான சிபிஎம் கட்சியைச் சேர்ந்த அனந்தவல்லி எனும் பெண் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பத்னாபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதி நேர பணியாளராக கடந்த 10 ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார் 6 ஆயிரம் மட்டுமே சம்பளம் வாங்கிக் கொண்டு பணியாற்றிய இவருக்கு தற்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வாழ்க்கையே மாறியுள்ளது. அவர் வேலை பார்த்த அதே அலுவலகத்தில் […]
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஊராட்சி மன்ற பெண் தலைவர். திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா, சத்திராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார் – இந்திரா தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பதாக திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் சென்னம நாயக்கன்பட்டியில், தென்னைமட்டை நார் கம்பெனி நடத்தி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட இந்திரா வெற்றி பெற்றார். இதனையடுத்து இவர், சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வந்தார். […]
கிருஷ்ணகிரியில் ஊராட்சி மன்றத் தலைவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம். சமீப காலமாகவே பட்டியலினத்தவர்களுக்கான கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கடலூரில், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சை எழுப்பிய நிலையில், மேலும் பட்டியலினத்தவர்களுக்கு எதிராக தொடரும் கொடுமைகள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி அஞ்சூர் ஊராட்சி மன்றத் தலைவர் பட்டியலினத்தவர் என்பதால், ஊராட்சி செயலாளர் அரசின் தகவல்களை தெரிவிப்பதில்லை என்றும், […]
ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை பெண் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி. இவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில், கடந்த ஜூலையில் நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், சுதந்திர தினத்தன்று ஊராட்சி […]
பின்னர் வாக்கு எண்ணிக்கையான கடந்த 2-ம்தேதி ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து அடுத்த மறுநாள் விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. விஜயலட்சுமியை ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்பதை ரத்து செய்ய வேண்டும். கடலூர் ஒன்றியம் குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆட்டோ சின்னத்தில் ஜெயலட்சுமி என்பவரும் , பூட்டு சாவி சின்னத்தில் விஜயலட்சுமி என்பவரும் போட்டியிட்டனர். பின்னர் வாக்கு எண்ணிக்கையான கடந்த 2-ம்தேதி ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அடுத்த மறுநாள் விஜயலட்சுமி […]