பனாமா : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் ஜன்னல் கதவுகள் வழியாக, உதவி கேட்டு நின்றிருந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரான், இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 பேர் பனாமாவில் உள்ள ஒரு ஹோட்டலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அதில் சிலர் தங்கள் ஹோட்டல் அறை ஜன்னல்களில் உதவி […]
மத்திய அமெரிக்க நாடான பனாமா நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. பனாமா மற்றும் கோஸ்டா ரிக்கா நாடுகள் அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. பனாமாவில் அமைந்துள்ள பசுபிக் பெருங்கடலின் கடற்கரையில் 6 மைல் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த பகுதி கோஸ்டா ரிக்கா பகுதியின் எல்லைப்பகுதி என்பதால் அந்த இடத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் […]