திருப்பூர்: பெஞ்சள் புயலால் வட தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை டிபி சத்திரம் மக்களுக்கு தவெக தலைவர் விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார். தனது பனையூர் அலுவலகத்துக்கு மக்களை வரவழைத்து, இந்த உதவிகளை அவர் செய்தார். சுமார் 350 குடும்பங்களை நேரில் வரவழைத்து அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கியதோடு, விஜய் அவர்களுடன் கலந்துரையாடி, குறைகளையும் கேட்டறிந்தார். ஆனால், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை தனது இருப்பிடம் வரவழைத்து விஜய் நிவாரண […]
சென்னை : தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று பனையூரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், திமுக மற்றும் பாஜகவை நேரடியாக விமர்சித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பொய் வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருவதாக தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில தன்னாட்சி உரிமை , நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, மாதந்தோறும் மின் கணக்கீடு முறை, மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு, மதுக்கடை மூடல், […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில், தவெக செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் கழகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், இக்கூட்டத்தில் ஏகமனதாக 26 […]
சென்னை : மக்களாட்சி, மதச் சார்வின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என்று விஜய் உறுதிமொழி ஏற்றார். சென்னை பனையூரில் இன்று நடைபெற்ற தவெக கட்சிக் கொடியேற்ற விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன், விஜய் கட்சிக்கொடி அறிமுக விழா தொடங்கியது. தவெக கட்சியின் கொடியில், மேலும் கீழும் சிகப்பு நிறத்திலும், நடுவில் மஞ்சள் நிறத்திலும் உள்ள […]
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வரும் நிலையில், அவர் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் கூட 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கி இருந்தார். அதன்பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவியும் வழங்கி இருந்தார். இதுமட்டுமின்றி அடிக்கடி விஜய் தனது […]
விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய மக்கள் இயக்கம் நிர்வாகிகள் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் அண்மைய காலமாக சினிமா வாழ்க்கையை தாண்டி அடுத்ததாக அரசியலில் கால் பதிக்க ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளை தற்போது செய்து வருவதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, அம்பேத்கர், காமராஜர் போன்ற முக்கிய தலைவர்கள்ளின் பிறந்தநாள் தினத்தன்று அவர்களின் சிலைகளுக்கு தனது நிர்வாகிகளை மாலை போட வைப்பதில் இருந்த, முக்கிய தலைவர்களாக இருக்கும் […]
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், நடிகர் விஜய் இன்று பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில், எப்போது வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும். மக்கள் பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்கவும், மக்கள் பணிகளை செய்ய […]
சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டத்திலிருந்தும் 150க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இரு மாதங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தின் பல்வேறு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வந்தது. தற்போது, நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், விஜய் மக்கள் […]