சென்னை : தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன. அந்த நிகழ்வில், 500 அரசு பள்ளிகளை தேர்வு செய்து அதற்கு அருகே உள்ள தனியார் பள்ளிகள் மூலம் தேவையான உதவி செய்யப்போவதாக தெரிவித்தனர். இந்த முயற்சிக்கு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில், நன்றி தெரிவித்தார். இதனை அடுத்து, தமிழகத்தில் 500 அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள் அமைப்பு தத்தெடுக்க போவதாக சில தகவல்கள் நேற்று வெளியாகின. […]
சென்னை : தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையில் அரையாண்டு தேர்வானது கடந்த டிசம்பர் 9ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வானது நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு டிசம்பர் 24 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை முடிந்து ஜனவரி 2ஆம் தேதியான இன்று பள்ளிகள் திறக்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று சமூக வலைதளங்களில், சில […]
புதுச்சேரி : மத்திய கல்வி அமைச்சகம் நேற்று திடீரென பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விதிமுறையில் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டு வருவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், வழக்கமாக நடைமுறையில் இருக்கும் 1-8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்பதில், 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும் என்ற நடைமுறையை கொண்டு வந்துள்ளதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்ததை தொடர்ந்து உடனடியாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக […]
சென்னை : நேற்று மத்திய கல்வி அமைச்சகம் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விதிமுறையில் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது. அதாவது கல்வி உரிமை சட்டம் (RTE) 2019 விதியில் மாற்றம் கொண்டு வந்து, 1-8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்பதில், 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும் என கூறப்பட்டது. 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பொது தேர்வு போல தேர்வை நடத்தி அதில் ஒருவேளை […]
சென்னை : தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது என்றும், தேசிய மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் நிதி அளிப்போம் என மத்திய அமைச்சர் கூறியதாகவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறுகையில், ” தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு நிலுவை இருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து வரக்கூடிய ரூ.2,151 கோடி தொகை நிலுவையில் இருக்கிறது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது. மத்திய அரசு குறிப்பிடும் […]
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை அனுப்பர்பாளையத்தில் பல்லகல்வித்துறை சார்பில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் புதிய தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்க அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தோடு சேர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை கோவைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில், ஐடி பூங்கா , விமான நிலைய விரிவாக்கம், சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் இதில் அடங்கும். […]
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அனுப்பர்பாளையத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள தந்தை பெரியார் நூலகத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு, பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ” கோவையில் அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் செயல்பாடுகளை கண்டு பொறுக்க முடியாமல் சிலரது சதியால் அவருக்கு பல்வேறு தடைகள் கொடுக்கப்பட்டன. இது அரசு நிகழ்வு என்பதால் நான் […]
சென்னை : தமிழ்நாடு முழுதுவதும் அரசு பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களை கனவு ஆசிரியர்களாக தேர்வு செய்து அவர்களை பிரான்ஸ் நாட்டிற்கு இன்ப சுற்றுலா அழைத்து சென்றது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை. இதனை கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அறிவித்து இருந்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். பள்ளிக்கல்வித்துறை செயல்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் , பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்த கனவு ஆசிரியர்கள் 55 பேரும் இன்று தாயகம் திரும்பினர். அவர் […]
சென்னை : தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் படிப்பு மற்றும் மற்ற திறமைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மற்றும் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு விருதுகள், கல்வி சலுகைகள் வழங்கி கௌரவிப்பதோடு அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் வெளிநாடு இன்ப சுற்றுலாவுக்கும் அழைத்து சென்று வருகிறது தமிழக அரசு. அண்மையில், 2023-24ஆம் கல்வியாண்டில் “கனவு ஆசிரியர்” விருது பெற்ற 55 ஆசிரியர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பெயரில் பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவுள்ளோம் என்றும், பிரான்ஸ் நாட்டின் […]
சென்னை : வங்கக்கடலில் புதியதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடதமிழகம் , தெற்கு ஆந்திரா நோக்கி வரவுள்ளதால் நாளை, நாளை மறுநாள் பல்வேறு பகுதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதலே பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு , காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு […]
சென்னை : இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் கொண்ட அட்டவணையை அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். அதில், 11ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 15, 2025இல் தொடங்கி, பிப்ரவரி 21, 2025இல் முடிவடையும் என்றும், எழுத்துத் தேர்வுகள் மார்ச் 5, 2025இல் தொடங்கி மார்ச் 27, 2025இல் முடிவடையும் என்றும் இதற்கான தேர்வு முடிவுகள் 19.05.2025இல் வெளியிடப்படும். என்றும் அமைச்சர் […]
சென்னை : இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் கொண்ட அட்டவணையை அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். அதில், 12ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 7, 2025இல் தொடங்கி, பிப்ரவரி 14, 2025இல் முடிவடையும் என்றும், எழுத்துத் தேர்வுகள் மார்ச் 3, 2025இல் தொடங்கி மார்ச் 25, 2025இல் முடிவடையும் என்றும் இதற்கான தேர்வு முடிவுகள் 09.05.2025இல் வெளியிடப்படும். என்றும் அமைச்சர் […]
சென்னை : இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார். அதில், 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையின் படி, செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 22, 2025-ல் தொடங்கி, பிப்ரவரி 28, 2025-ல் முடிவடையும் என்றும், எழுத்து தேர்வுகள் மார்ச் 28, 2025இல் தொடங்கி ஏப்ரல் 15, 2025இல் முடிவடையும். இதற்கான தேர்வு முடிவுகள் 19.05.2025இல் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார். 10ஆம் […]
சென்னை : தமிழ்நாடு அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் அன்பில் மகேஷ். இவர் அவ்வப்போது மாவட்டந்தோறும் பள்ளிகளிகளுக்கு விசிட் அடித்து மாணவர்களுடன் கலந்துரையாடி பள்ளிகளை ஆய்வு செய்வது வழக்கம் . அப்படி நேற்று காஞ்சிபுரம் , வாலாஜாபாத், உத்தரமேரூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளை முடித்து கொண்டு நேற்று இரவு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, சென்னை அமைந்தக்கரையில் உள்ள […]
டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று காலை பிரதமர் மோடியை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த மனுவை அளித்தார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றன. இந்த சந்திப்பு குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்தினார். அந்த நிகழ்வில் கூறுகையில், ” பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நேற்று டெல்லி வந்தேன். […]
டெல்லி : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நேரில் சந்தித்துள்ளார். இதற்காக நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார். இன்று காலை 10 மணியளவில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு பவனிலிருந்து பிரதமரை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்திற்கு தேவையான முக்கிய கோரிக்கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைக்க உள்ளார் என்று கூறப்பட்டது. சென்னை […]
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெரும் பள்ளிகள் , தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் இந்த வாரம் காலாண்டு தேர்வு முடிவடைய உள்ளது. வழக்கமாக காலாண்டு தேர்வு விடுமுறை என்பது அக்டோபர் 2வரையில் மட்டுமே இருக்கும். அதேபோல இந்தாண்டும் அக்டோபர் 2 வரையில் மட்டுமே காலாண்டு விடுமுறை அறிவிக்கப்ட்டிருந்தது. வழக்கமாக இல்லாமல் இந்தாண்டு குறுகிய நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் விடுமுறை நீட்டிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்தது. அதற்கு ” […]
சென்னை : கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை அசோக் நகர் பள்ளியில் தன்னம்பிக்கை சொற்பொழிவு என்ற நிகழ்வில் ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு என்பவர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார். முன் ஜென்மம், மாற்றுத்திறனாளிகள் குறித்து விஷ பேச்சுக்களை அவர் பேசியிருந்தார். அப்போது அங்கிருந்த பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் , மகா விஷ்ணு பேச்சை கடுமையாக எதிர்த்தார். ஆனால். மகா விஷ்ணு அவருக்கு எதிராகவும் சர்ச்சை கருத்துக்களை கூறினார். இந்த […]
சென்னை : அசோக் நகர் அரசு பள்ளியில் அண்மையில் தன்னம்பிக்கை சொற்பொழிவு என்ற நிகழ்வில் ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் முன்ஜென்மம், மாற்று திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தற்போது பள்ளிக்கல்வித்துறையில் பூதாகரமாக மாறியுள்ளார். மேலும், மகா விஷ்ணு அங்குள்ள மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் பல்வேறு கண்டங்களை எதிர்கொண்டுள்ளது. Read more – “மகா விஷ்ணுவை சும்மா விடமாட்டேன்.” ஆவேசமான அமைச்சர் அன்பில் மகேஷ்.! இதுகுறித்து 3,4 […]
சென்னை : அசோக் நகரில் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வு தற்போது தமிழகம் முழுக்க பேசுபொருளாக மாறியுள்ளது. முன் ஜென்மம், மாற்றுத்திறனாளிகள் பற்றி ஆன்மீக சொற்பொழிவாளர் பேசிய சர்ச்சைக் கருத்துக்கள் தற்போது பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது. இது குறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியர் விளக்கமளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமென பள்ளிக்கல்வித்துறை […]