இந்த வருட தீபாவளி ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் மட்டும் விடுமுறை என ஏற்கனவே பள்ளிக்கல்வி துறை அறிவித்து இருந்தது. இதற்கு பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இதனை அடுத்து, தற்போது, தீபாவளியை முன்னிட்டு, அதற்க்கு முந்தைய நாள் சனிக்கிழமை விடுமுறை எனவும், தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள் கிழமை, வேண்டுமென்றால் பள்ளி நிர்வாகம், அந்ததந்த மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று உள்ளூர் விடுமுறையாக அறிவித்து கொள்ளலாம் என தற்போது பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது