இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான தாக்குதலில் காசா பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 65 ஆக உயர்ந்துள்ளது. மேலும்,இஸ்ரேலில் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புனித ரமலான் மாதம் ஆரம்பமானதிலிருந்து இஸ்ரேல் காவல்துறையினருக்கும்,பாலஸ்தீனர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில்,கடந்த திங்களன்று பாலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்ரேல் காவல்துறையினரின் மீது கற்கள் உள்ளிட்ட சில பொருள்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து,பாலஸ்தீனர்களைக் கட்டுபடுத்த இஸ்ரேல் காவல்துறையினர் ரப்பர் தோட்டாக்கள், ஸ்டன் கையெறி குண்டுகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் […]
1967-ம் ஆண்டுவரை ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு கடந்த 1980-ம் ஆண்டில் இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலேம் நகரில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தினரும் இந்நகரை தங்களுக்கே உரிமையாக்கி கொள்ள முயன்று வருகின்றனர். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் சொந்தம் கொண்டாடிவரும் ஜெருசலேம் நகரின் கிழக்கு பகுதியில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பாலஸ்தீனர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இஸ்ரேல் அரசு […]