இந்தியாவிலே மிக அதிகமான பரிசோதனை தமிழகத்தில் தான் செய்யப்படுகிறது என முதல்வர் பழனிச்சாமி தனது உரையில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, நாள் ஒன்றுக்கு 6000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் பொதுமுடக்கத்தை நீடிப்பது குறித்து இன்று முதல்வர் பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் முடிவில் மக்களிடம் காணொளி வாயிலாக முதல்வர் பழனிச்சாமி உரையாற்றினார். அந்த உரையில் அவர், இந்தியாவிலே […]