பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருஆவினன்குடி அருகே உள்ள மண்டபத்தில் முத்துகுமாரசுவாமிக்கும் வள்ளி, தெய்வானைக்கும் இன்று திருக்கல்யாணம் நடக்கிறது. மேலும் இன்று இரவு வெள்ளி தேரோட்டமும் நடக்க இருக்கிறது.இந்நிலையில் நாளை மாலை கிரிவீதியில் தேரோட்டமும் நடக்க இருக்கிறது. குழந்தை வேலாயுத சுவாமி: மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோவிலின் பெயர் குழந்தை வேலாயுதசுவாமி கோவில் ஆகும். இந்த இடத்தின் பெயர் திரு ஆவினன்குடியாகும். இக்கோவிலே உண்மையில் மூன்றாவது படைவீடாகும். இக்கோவிலுடன் இணைந்து ஒரு குளம் உள்ளது. முருகனின் பழமையான […]