திருவனந்தபுரம் : நாளை முதல் பொங்கல் பண்டிகைகள் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை (ஜனவரி 14) பொங்கல் தினம, நாளை மறுநாள் (ஜனவரி 15) மாட்டு பொங்கல், ஜனவரி 16 காணும் பொங்கல் ஆகிய தினங்கள் மட்டுமின்றி ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறை அளித்து ஒருவார காலம் விடுமுறை அளித்துள்ளது தமிழக அரசு. தமிழகத்தைப் போல, அண்டை மாநில எல்லையோர பகுதிகளிலும் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு அங்கும் உள்ளூர் விடுமுறை விடுவது […]
கேரளா : மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஷோரனூர் அருகே ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த 4 ரயில்வே துப்புரவுத் தொழிலாளர்கள் சனிக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் நான்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் எனவும், அதில் இரண்டு, ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என தெரியவந்துள்ளது. பாரதபுழா ஆற்றுப்பாலத்தில் உள்ள தண்டவாளத்தை கிடைத்த குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, கேரளா எக்ஸ்பிரஸ் வந்ததால், அதனைக் கவனிக்காமல் தண்டவாளத்தில் சிக்கிய அந்த நான்கு தொழிலாளர்கள் ரயிலில் மோதி பக்கத்தில் இருந்த […]
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் கரிம்பா கிராமத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு தனது அண்டை வீட்டாரான 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 90 வயது முதியவருக்கு விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் சேர்த்து 50,000 ரூபாய் அபராதமும் விதித்தார். இந்த உத்தரவை உறுதி செய்த சிறப்பு அரசு வக்கீல் நிஷா விஜயகுமார், குழந்தைகளை […]
தமிழக வனத்துறையினர் சிறைபிடிப்புக்கு காரணமான பாலக்காடு ஆர்.பி.எப் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கோவை அருகே ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்தது குறித்து விசாரிப்பதற்காக பாலக்காடு சென்ற தமிழக வனத்துறை அதிகாரிகளை அங்குள்ள தொடர்வண்டி பாதுகாப்புப் படையினர் சிறை பிடித்து அவமதித்ததை தமிழக அரசு விட்டுவிடக் கூடாது. இதற்குக் காரணமான தொடர்வண்டி பாதுகாப்புப் படை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி […]
கேரளாவில் கனமழை பெய்து வருவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் உள்ள பாலக்காடு ரயில் நிலையத்தின் தண்டவாளம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து கேரளாவிற்கு பாலக்காடு வழியாக செல்லும் அதிவிரைவு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 2 நாள்களுக்கு 9 அதிவிரைவு ரயில்கள் இயங்காது என தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது.