பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரி கவுரவ் அலுவாலியா சந்தித்தார். பாகிஸ்தானை உளவு பார்த்தாக கூறி பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டார் குல்பூஷண் ஜாதவ்.தற்போது அவர் பாகிஸ்தான் சிறையில் உள்ள நிலையில்,குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் பார்க்க பாகிஸ்தான் அனுமதி அளித்தது.இதனை தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரி கவுரவ் அலுவாலியா மற்றும் குல்பூஷண் ஜாதவ் இடையேயான சந்திப்பு தொடங்கியது.
குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் பார்க்க பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது. இந்திய கடற்படையில் அதிகாரியாக இருந்தவர் குல்பூஷண் ஜாதவ். 2016 ம் ஆண்டு பலுசிஸ்தான் எல்லை பகுதியில் இருந்து பாகிஸ்தானை உளவு பார்த்தாக கூறி பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டார். உளவு பார்க்கப்பட்ட பிரிவில் குல்பூஷண் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2017 ம் ஆண்டு அவரை தூக்கிலிட கோரி பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து இந்தியா சார்பில் பாகிஸ்தானுக்கு எதிராக […]