ஜம்மு-காஷ்மீர் எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய அத்துமீறியத் தாக்குதலில், எல்லைப்பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். காஷ்மீர் எல்லையில் அமைந்துள்ள அக்னூர் பகுதியில் அதிகாலையில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சுட்டும், சிறிய ரக மோட்டார் குண்டுகளையும் வீசித் தாக்குதல் நடத்தியதில், அக்னூர் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தான் படையின் அத்துமீறலுக்கு, இந்திய வீரர்கள் தொடர்ந்து பதிலடி […]