பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதாவது, அரசு ரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாஃப் கட்சியின் துணை தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷா மஹ்மூத் குரேஷிக்கும் இதே வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இம்ரான் […]
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இமரான் கான், சைபர் வழக்கில் ரகசியங்களைக் கசிய விட்ட குற்றத்திற்காகவும், மேலும் ஒரு சில வழக்கில் சிறையில் உள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். இதன்பின் பாகிஸ்தானி பொருளாதார நெருக்கடி காரணமாக அரசு மீது பல்வேறு எதிர்ப்புகள் வந்தது. இம்ரான் கான் தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகிய முக்கியக் கட்சி ஒன்று, எதிர்க்கட்சியுடன் இணைந்தது. இதனால், இதனால் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை […]
இஸ்லாமாபாத்தில் இரண்டு பாகிஸ்தான் விமானங்கள் நடுவானில் விபத்திலிருந்து தப்பின. இஸ்லாமாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈரானிய எல்லையில் பறந்து கொண்டிருந்த இரண்டு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) விமானங்கள் நடுவானில் மோதி ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஈரானிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) “அலட்சியம்” காரணமாக விமானங்கள் ஒன்றுக்கொன்று மிகவும் நெருக்கமாகிவிட்டதாக பாகிஸ்தானின் டான் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. அந்த விமானங்களில் ஒன்று இஸ்லாமாபாத்தில் இருந்து துபாய்க்கு பறந்து கொண்டிருந்த PIA போயிங் 777 (PK-211) ரக விமானம் என்றும், மற்றொன்று […]
இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையைத் தாண்டிய 21 வயது மதிப்புத்தக்க பாகிஸ்தான் இளைஞரை ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரில் BSF கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 21 வயதான பாகிஸ்தான் இளைஞர் சமூக ஊடகங்கள் மூலம் நட்பாக பழகிய மும்பை பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது காதலியை சந்திக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் அவர் சனிக்கிழமை இரவு ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்திற்கு அருகே இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையைத் தாண்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது எல்லைப் பாதுகாப்புப் படை போலீசார் அந்த […]
யூனியன் பிரதேசமான காஷ்மீருக்குள் அதிக எண்ணிக்கையிலான தீவிரவாதிகளை நுழைக்க பாகிஸ்தான் ராணுவம் சதித்திட்டத்தை தீட்டி வைத்துள்ளதாக உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உளவுத்துறை தெரிவித்துள்ள தகவலின் படி கரேன் பிரிவுக்கு எதிரே இருக்கும் ஆத்முகாம், துத்னியல் மற்றும் தஹந்தபானி ஆகிய பகுதிகளில் இருக்கும் ஏவுதளங்களில் 80 தீவிரவாத குழுக்கள் தென்படுகிறது. இது பாகிஸ்தான் ராணுவம் கட்டுப்பாட்டு பகுதிக்கு மிக அருகில் உள்ளது.இதிலிருந்து சதி செயலுக்கு திட்டமிட்டுவதை தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஜெய்ஷ்-இ-முகமது,லஷ்கர்-இ-தொய்பாவை போன்ற தீவிரவாத அமைப்புகளைச் […]
பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவமும் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மன்கோட், மெந்ஹார் ஆகிய செக்டாரில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த தாக்குதல் மக்கள் மத்தியில் […]
உலக கோப்பை தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. அதற்கான Warm-up போட்டி இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று Warm-up முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியின் ,ஆப்கானிஸ்தான் அணியும் மோதி வருகிறது . இரண்டாவது போட்டியில் இலங்கை அணியும் , சவுத்ஆப்பிரிக்கா அணியும் மோதி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணி இருதரப்பு தொடரில் பங்கேற்றது. அந்த தொடரில் பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் […]
இந்தியா நடத்திய பதிலடி தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகம் தரைமட்டமாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகள் போட்டோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தியது. சுமார் 80கி.மீ வரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வந்த முகாம்கள் இந்தியாவின் தாக்குதலில் தரை […]
காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 44 CRPF வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். இந்த கொடூர தாக்குதலுக்கு ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியது பாகிஸ்தான் என்று தெரியவந்துள்ளது. காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு […]
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானி அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானி.இவர் தென்கொரியா நாட்டில் நடைபெறும் மாநாட்டு ஒன்றில் பங்கேற்பதற்க்காக லாகூர் நகரில் உள்ள அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது அவரின் பெயர் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது என்று கூறி விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்தனர். இந்நிலையில் அவர் கூறுகையில் , நான் நாட்டை விட்டு தப்பியோடவில்லை . பிரதமர் இம்ரான்கான் அரசியல் எதிரிகளை தாக்க வேண்டும் […]
காஷ்மீரில் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. அமைதி பேச்சுவார்த்தை நடந்தாலும் அதை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் 3 நாட்களில் மட்டும் 7வது முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இவர்களின் தாக்குதலுக்கு எதிராக இந்திய வீரர்கள் தக்க பதில் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.