மத்திய பாஜக அரசு தற்போது கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பல நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று கூறியதற்கு அந்த அதிகாரி விளக்கம். அவற்றில் பெரும்பாலானவற்றில் வன்முறை வெடித்தது. ஏராளமான பொதுச்சொத்துக்களும் கடுமையாக சேதப்படுத்தப்பட்டது. இதிலும் குறிப்பாக லக்னோ, மீரட் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டத்தில் நடந்த வன்முறையில் இதுவரை 19 பேர் பலியாகினர். […]