உச்சகட்ட பதற்றமான சுழலில் மத்தியில் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பின்னர் பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், இம்ரான் கான் மீது அரசு ரகசியம் கசிவு, […]
கடந்த 2022-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து, அவரது தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர், பாகிஸ்தான் பிரதமராக ஷாபாஸ் ஷெரிப் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிந்ததால், கடந்த ஆகஸ்டு மாதம் அந்நாட்டு நாடாளுமன்றம், கலைக்கப்பட்டு அன்வாருல் ஹக் காதர் இடைக்கால பிரதமராக தேர்வானார். இதன்பின் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் பாகிஸ்தானில் […]