பாகிஸ்தானின் தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் நேற்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இதில், 6 பேர் உயிரிழந்தனர் எனவும், 10 பேர் காயமடைந்தனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக உள்ளூர் காவல்துறை அதிகாரி முகமது அலி தெரிவித்தார். பல கடைகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. எந்தவொருஅமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை . இந்த குண்டுவெடிப்பிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்து, காயமடைந்தவர்களை மீண்டு வர பிரார்த்தனை செய்வதாகவும் கூறினார். […]