ஜம்மு-காஷ்மீரில் எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினர் நடத்திய அத்துமீறியத் தாக்குதலில், எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினர் நேற்று அதிகாலை முதல் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலையில் ஆர்னியா பகுதியில் நிலைகொண்டுள்ள இந்தியப் படைகளை குறிவைத்து, சிறிய ரக மோட்டார் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் படையினர், ஆர்.எஸ்.புரா பகுதியிலும் நேற்று இரவு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பாகிஸ்தான் படைக்கு, […]