டி-20 உலகக்கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின், பெர்த்தில் நடைபெறும் இன்றைய சூப்பர்-12 போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர் முடிவில் 91 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக காலின் அக்கர்மன் 27 ரன்கள் குவித்தார். பாக். அணியில் ஷதாப் கான் 3 விக்கெட்களும், மொஹம்மது […]