Painting idea-ஓவ்வொரு நிறங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது அது என்னவென்று இப்பதிவில் காண்போம். வண்ணங்களுக்கு ஏற்றார் போல் தான் நம் எண்ணங்களும் பிரதிபலிக்கும். ஆமாங்க.. நம் மனநிலையை மாற்றும் தன்மை கூட நிறங்களுக்கு உண்டு.ஒவ்வொரு நிறங்களை பார்க்கும் போதும் நம் மனம் மாறுபடும். சிவப்பு: சிவப்பு நிறத்தை பார்க்கும் போது தூண்டுதல் ஏற்படும். இந்த நிறத்தை புதுமண தம்பதிகளின் அறையில் பயன்படுத்தலாம். சமையலறையில் பார்டரில் சிவப்பு நிறத்தில் கொடுத்துவிட்டு சுவற்றில் பச்சை வண்ணம் பூசலாம். மேலும் குழந்தைகளின் […]
ஒரு சிறு மாத்திரையில் வள்ளுவர் உருவத்தை வரைந்த ஏழை மாணவியின் அசாத்திய ஓவிய திறமையானது குடும்பச்சூழல் காரணமாக நின்றது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வெவ்வேறு விதமான திறமைகளும் விருப்பங்களும் இருந்தாலும் வயிற்று பிழைப்புக்காக கிடைத்த வேலைக்கு செல்லும் காலம் இது. இத்தகைய நிலையில் சிறு பொருள்களில் கூட ஓவியம் வரையும் திறமை கொண்ட இந்த பெண் தனக்கு விருப்பமான ஓவியக்கலை படிப்பில் குடும்ப சூழ்நிலையால் சேர முடியாமல் இருக்கிறாள். தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆழங்குலம் அடுத்துள்ள ஊத்துமலை கிராமத்தை […]
மறைந்த மர்லின் மன்றோவின் ஓவியம் ரூ.1,500 கோடிக்கு விற்பனையாகி சாதனை. கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1926-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி பிறந்த மர்லின் மன்றோ, அமெரிக்க நடிகையும், பாடகியும், திரைப்பட இயக்குநரும் ஆவார். தனது ஆரம்ப வாழ்க்கையை அனாதை இல்லத்தில் கழித்த இவர், 16 வயதில் மனம் முடித்த மர்லின் மன்றோ, 1944ல் ஒரு மாடல் அழகியாக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். 1947-ஆம் ஆண்டில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவருக்கு The […]
மிகச் சிறந்த ஓவியரான பிக்காசோ அவர்களின் ஓவியம் நியூயார்க்கில் உள்ள ஏல வீட்டில் 103 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. போப்லா பிக்காசோ என்பவர் எசுப்பானியா நாட்டை சேர்ந்த ஒரு புகழ்பெற்ற ஓவியர். இவர் வரைந்த ஓவியங்களுக்கு மக்கள் மத்தியில் தனி சிறப்பும் மரியாதையும் உண்டு. 1881ஆம் ஆண்டு பிறந்த இவர் 1973 ஆம் ஆண்டு உயிரிழந்தார். மிகச் சிறந்த ஓவியரான பிக்காசோவின் ஓவியம் தற்பொழுது வரையிலும் பல்வேறு இடங்களில் ஏலங்களுக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 1932 ஆம் […]
வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களின் விஸ்கி பாட்டில் ஓவியம் 1.3 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வின்ஸ்டன் சச்சில் பிரிட்டன் ராணுவ அதிகாரி மட்டுமல்லாமல் பிரிட்டன் அரசியல்வாதி, எழுத்தாளர் பேச்சாளர் மற்றும் ஓவியர் என பல்வேறு சிறப்பு பெருமைகளைக் கொண்டவர். இவர் வரைந்த பல ஓவியங்கள் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்நிலையில் இரண்டாம் உலகப்போரின் போது தலைவர்களின் விருப்பமான விஸ்கி ஒன்றை எண்ணெய் ஓவியமாக வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் வரைந்துள்ளார். இந்த ஓவியத்தில் 1930 இல் உள்ள […]
பிரான்சில் உள்ள காம்பிக்னே நகரை சேர்ந்த தொண்ணூறு வயது மூதாட்டி ஒருவர் தனது வீட்டை விற்க முடிவு செய்தார். இந்த வீடு 1960-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமை வாய்ந்த வீடாகும். இதைத்தொடர்ந்து அந்த நகரில் உள்ள ஏல அதிகாரிகளிடம் தனது வீட்டை விற்க வேண்டும் என கூறியுள்ளார் அந்த மூதாட்டி. இதை தொடர்ந்து ஏல அதிகாரிகள் மூதாட்டி வீட்டில் உள்ள மரபொருள்களை ஆய்வு செய்தனர். அப்போது சமையலறையில் எரிவாயு அடுப்பிற்கு மேலே ஒரு பழமை வாய்ந்த ஓவியம் […]
தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் ஏராளமான மாணவ மாணவியர் பங்கேற்றனர். நெல்லை பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையினர் சார்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது. ஐந்து வகையான தலைப்புகளில் 1 முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஓவியப்போட்டியில் பங்கேற்றனர். பாதுகாப்பான உணவு, சத்தான மற்றும் செறிவூட்டப்பட்ட உணவு, உணவை வீணாக்காதீர்கள் உள்ளிட்ட தலைப்புகளில் மாணவ மாணவியர்கள் தங்கள் கற்பனைத் திறனை கொண்டு ஓவியங்களை வரைந்தனர். வெற்றி […]
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் கிராம தெருவில் உள்ள அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய மாமேதை அண்ணல்.அம்பேத்கர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பெயிண்ட் வீசியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்தும், அடையாளம் தெரியாத நபர்கள் குறித்தும் திருவொற்றியூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திரிபுராவில் மாமேதை லெனின் சிலை,தமிழகத்தில் பெரியார் சிலை,உத்தரப்பிரதேசத்தில் உள்ள மீரட் நகரில் அண்ணல் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தபட்டதை தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள திருவெற்றியூரில் அண்ணல் அம்பேத்கர் சிலை அவமதிப்பு நிகழ்ந்துள்ளது.