தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, விஷால் தலைமையில் ஒரு அணியும், பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும் இந்த தேர்தலில் போட்டியிட உள்ளனர். இந்நிலையில், நடிகர் சங்க தேர்தல் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிற நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள், “நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் வெறி பெறுவதே எனது விருப்பம்.” என தெரிவித்துள்ளார்.