“பத்மாவதி திரைப்பட விவகாரத்தில் ஒரு இந்துத்துவ கோஷ்டி அடி.வெட்டு.குத்து.கொலை என்று நாட்டை ரணகளமாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இவ்விஷயத்தில் ஒன்றுமே பேசாமல் மரண அமைதி காப்பதேன்?” -நடிகரும்,பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சத்ருகன் சின்ஹா பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவி வேஷத்தில் மாநிலத்திற்கு ஒரு மதகுரு பெண்களுடன் சரசமாடுவதை ஏன் கண்டு கொதிக்கவில்லை?ஒருவேளை அதை வீடியோவில் பார்த்து ரகசியமாக ரசிக்கிறீர்களோ?இன்று நித்தியானந்தா நடிகையுடன் சரசமாடியது உண்மையான வீடியோ என உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது.எங்கே போனது உங்கள் காவி மானம்,ரோஷம் எல்லாம்? மத வேறுபாடுகளைத் தாண்டிய மக்கள் நல்லிணக்கக் கருத்தை ஒரு புதிய வடிவில் கூறிய இந்தித் திரைப்படமாகிய ‘பி.கே.’ முதல், ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்த தமிழ்த் திரைப்படமான ‘மெர்சல்’ வரையில் மதவெறி சக்திகளின் […]