சென்னை : நாட்டிற்காக உயர்நிலையில் சேவையாற்றியவர்களை கவுரவிப்பதற்காக மத்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரியவிருதான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விருது அறிவிக்கப்பட்டது குறித்து அஜித்குமாரன் நன்றி தெரிவிக்கும் வகையில், தன்னுடைய மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அஜித் கூறியதாவது ” இந்த மதிப்புமிக்க கெளரவத்திற்காக, குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். […]
சென்னை : நாட்டிற்காக உயர்நிலையில் சேவையாற்றியவர்களை கவுரவிப்பதற்காக மத்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரியவிருதான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும். இந்த சூழலில், இந்த ஆண்டுக்கான (2025) 139 பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அதில், அஜித்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நடிகர்களில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், […]
Vijayakanth : விஜயகாந்த் நினைவிடத்தில் அவருக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை , அவரது நினைவிடத்தில் வைத்து வணங்கினர் விஜயகாந்த் குடும்பத்தினர். தமிழ் திரைத்துறையில் கதாநாயகனாகவும், திரைத்துறையினர் , பொதுமக்கள் மத்தியிலும் நிஜ நாயகனாகவும் திகழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த். திரைத்துறையில் கோலோச்சியது போல, தமிழக அரசியலில் களமிறங்கி , தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் கட்சியை தொடங்கி தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு வரையில் முன்னேறியவர் விஜயகாந்த். திரைத்துறையிலும், அரசியல் துறையிலும் மக்கள் மத்தியில் […]
இன்று நாடு முழுவதும் 75வது குடியரசுதின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது, பத்ம விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் அறிவிக்கப்படும். முன்னதாக அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலிருந்து 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் அறிவிக்கப்பட்டிருந்தது. அதுபோக 21 பேருக்கு சிறப்பு விருதுகளும் அறிவிக்கப்பட்டு இருந்தது. நாட்டின் 75வது குடியரசு தினம்..! 80 ஆயுதப் […]
குடியரசு தினத்தை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு மத்திய அரசு 2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை 128 பேருக்கு அறிவித்துள்ளது. இதில் கடந்த ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்,உ.பி முன்னாள் முதல்வர் கல்யாண்சிங்,பிரபா அட்ரே,ஸ்ரீ ராதேஷ்யாம் கெம்கா (இலக்கியம் கல்வி) ஆகிய நான்கு பேருக்கு பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சத்ய நாதெல்லா, சுந்தர் பிச்சை, […]