சீனா ஏவி, பூமியை நோக்கி வந்த ராக்கெட்டின் உதிரி பாகங்கள் பசுபிக் பெருங்கடலில் இன்று அதிகாலை விழுந்துவிட்டது. சீனா கட்டுப்பாட்டில் இருக்கும் டியான்காங் விண்வெளி நிலையத்திற்கு தேவையான உபகரணங்களை விண்வெளிக்கு கொண்டு செல்வதற்காக 23,000 கிலோ எடை கொண்ட 108 அடி நீளமுடைய ராக்கெட்டை கடந்த மாதம் அக்டோபர் 31ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட்டானது, தனது வேலையை முடித்துவிட்டு பூமியின் எந்த பகுதியில் விழ வேண்டும், மக்கள் இருக்கும் இடத்தில் இருந்து எவ்வளவு தொலைவில் […]